Posts

Showing posts from March, 2021

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி ஐந்து முதல் மழை

  பகுதி ஐந்து முதல் மழை  காந்தார அரண்மனையின் மங்கல் அறையில் வசுமதி காத்திருந்தாள். ஏழு நாட்கள் மணச்சடங்குகள் முடிந்திருந்தன. லாஷ்கர முறையிலும், வைதிக முறையிலும் மணம் நிகழ்ந்திருந்தது. மூன்று சூதப்பெண்கள் வந்து மங்கல நாளுக்கான தேவனை எழுப்ப வந்திருப்பதாக சொன்னனர். பனிரெண்டாவது ஆதித்யனான பகனின் கதையைச் சொன்னார்கள். விண்ணோர் கடைந்த அமுதை பகன் முதலில் உண்டான். தேவர்கள் முறையிட ருத்ரன் அவன் கண்களை எரித்தான். விழியிழந்த பகன் தன் மனைவி ஸித்தி துணையோடு விண்ணெங்கும் அலைந்தான்.அவள் காதலின் ஒளியாலேயே கண்ணொளி பெற்றான். அவள் காதலின் வல்லமை கண்டு அகம் மகிழ்ந்த ருத்ரன் அவன் விழிகளைத் திருப்பி அளித்தான் என்றனர். அவர்கள் சென்றதும் திருதராஷ்டிரன் உள்ளே வந்தான். அவளிடம் வராமல் தயங்கி நின்றான். கண்தெரியாமையால் அவன் உடலில் ஏற்படும் குறிகள் அவளுக்குள் மெல்ல விருப்பமூடுபவையாக மாறுவதைக் கண்டாள். மெல்ல அவனை நெருங்க, அவன் இவளை வருட, பின் அணைத்துக் கொள்கிறார்கள். அவன் அவள் வாசனையை அறிந்ததைப் பற்றிச் சொல்கிறான். பின் இசை பற்றிப் பேசுகிறான். அவள் அவன் இசையைத் தன்னாலும் கேட்க முடியும் என்றாள். பின் அணைத்த போது அவன்

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி நான்கு: பீலித்தாளம்

  பகுதி நான்கு பீலித்தாளம் அமைச்சர் சத்ய்விரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் ஸ்வேதசிலை என்ற லாஷ்கர கிராமத்துக்குச் சென்றனர். அவர் அளித்த பரிசுகளைப் பெற்ற குலமூத்தோர் கான்டாரியை வாழ்த்தினர். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசிக்குத் தாலி சுருட்ட வேண்டும் என்பது விதி. லாஷ்கரப் பெண்கள் எல்லாத் திசைகளிலும் பல நாட்கள் பயணம் செய்து ஒருத்தி அதைக் கண்டுபிடித்தாள். தாலி சுருட்டும் நிகழ்வு மிகுந்த விமரிசையாக நடக்கிறது. அதை உப்பரியிகையிலிருந்து தன் பத்து சகோதரியருடன் பார்க்கிறாள் வசுமதி. அவள் சிறுதங்கை விளையாடிக் கொண்டிருக்கிறாள். வசுமதி தான் இந்த மண், இதன் உறவுகள் இவற்றை இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு சூதப்பெண் அவள் குருடனை மணக்கவிருப்பது பற்றி பகடியாகச் சொன்னது பற்றிக் கூறுகிறாள். அஸ்தினாபுரியிலிருந்து திருதராஷ்டிரனும், மணமகன் வீட்டாரும் காந்தாரனகரி நோக்கிக் கிளம்புகின்றனர். தார்த்தன் மிகுந்த பதட்டத்துடன் இருக்கிறான். தன் நகைகள், ஆடைகள் குறித்து ஆர்வமுடன் இருக்கிறான். விதுரனை தன்னிடமே இருக்கச் சொல்கிறான். இசை பற்றிப் பேசுகிறான். விதுரன் தான் காவியத்தில் பலமுறை வாழ்வது பற்றிக் கூறுகிறான். தான்

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி மூன்று: புயலின் தொட்டில்

  பகுதி மூன்று: புயலின் தொட்டில் பீஷ்மரும், பலபத்ரரும் தனியாகவே காந்தாரம் நோக்கி சென்றனர். நிலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. வழியில் ஓரிடத்தில் இளைப்பாறும் போது, வித்யுதத்தன் என்ற பிராமணனை வழிகாட்டியாகக் கூட்டிக்கொள்கிறான். வழியில் கைவிடப்பட்ட ஒரு நகரத்தைப் பார்க்கிறார். அது இறந்தவர்களின் நகரம், சென்றவர் திரும்பமாட்டார்கள் என்றான் வித்யு. அங்கே செல்கிறார்கள். செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இடிந்த் வீடுகளையும் கோட்டையையும் கொண்ட நகரம். குழிகளில் மண் குடுவைகளில் எலும்புகள் கிடைக்கிறது. இது சத்யயுகத்தில் மக்கள் வாழ்ந்த நகரம். மக்களுக்கு அப்போது இறப்பே இல்லை. வயதாகிச் சுருங்கியபின், அவர்களை மண்தாழிக்குள் வைத்து புதைத்துவிடுவார்கள். இவர்கள் கங்கையிலும், சிந்துவிலும் உள்ள மக்களின் மூதாதையராகத்தான் இருப்பர் என்றார் பீஷ்மர். இந்த நிலத்தின் வரலாற்றை ஒருவர் முழுமையாக எழுதி விட முடியுமா? பின் காந்தாரத்தின் எல்லையில் வித்யுவை விட்டுத் தனியாகப் பயணமாகிறார்கள் யயாதிக்குத் தன் இளமையைத் தரமறுத்த துர்வசுவை அவர் துரத்தி விடுகிறார். தன் தோழன் ரனசிம்மனுடனும், தன்னுடன் சேர்ந்த ஆயிரம் வீரர்களுடனும் துர்வசு மேற

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி இரண்டு: கானல் வெள்ளி

பகுதி இரண்டு: கானல் வெள்ளி விதுரன் அரசு அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறான். எந்தத் திறமையும் தேவைப்படாத இதில் தான் ஏன் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறான். திருதராஷ்டிரன் அழைப்பதாக விப்ரன் வந்து சொல்கிறான். பீஷ்மர் தன்னை வந்து காணாததால் சினந்திருக்கிறான் என்றார். திருத மேகராகம் சூதர்கள் இசைக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறான். முன்னமர்ந்த விதுரனுக்கு இசை குறித்து எண்ணங்கள் ஓடுகிறது. குழல் வாசித்த விழியிழந்த சூதருக்கு பொன்னும், பெண்ணும் பரிசளிக்கிறான் த்ருத. பின் விதுரனிட பீஷ்மர் குறித்து சினக்கிறான். அது குறித்து ஆளனுப்பியிருக்கிறேன் என்றான் விதுரன். திருத உண்ண அமர்கிறான். மலைபோல் உண்கிறான். அம்பிகை வருகிறாள். தன் மகன் முடிசூட்டுவது பற்றி பேரரசி என்ன முடிவெடுத்தாள் என்றாள். காந்தாரத்து இளவரசியை மணம் முடிப்பது பற்றிப் பேசினர் என்றான் விதுரன். குலம் தாழ்ந்தவர்களை மணக்க மாட்டேன் என்றான் திருத. அவர்களிடம் சம்பந்தம் பேசுவதில் உள்ள திட்டத்தை எடுத்துரைத்தான் விதுரன். அப்போது விப்ரன் வந்து பீஷ்மர் வந்து அரசனை ஆயுதசாலைக்கு வந்து சந்திக்கச் சொல்கிறான். திருத சினங்கொண்டு எழுகிறான். அவரை கைது செய்யச் சொல்கிறா

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் - பகுதி ஒன்று வேழாம்பல் தவம்

  மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி ஒன்று வேழாம்பல் தவம் அலகிலா நடனம் மட்டுமே இருந்தது. அந்நடனமாகவே அந்நடமிடுபவன் இருந்தான். பின் இடக்கரமும் வலக்கரம் ஒருமாத்திரை அளவு வேறுபட, மெல்ல உருமாறி, இடப்பக்கம் முலை முளைத்து கருணைமிக்க அன்னையாகவும் இருந்தான். அன்னை தன் உள்ளங்கையில் புடவியை தோற்றுவித்து அதை தாயக்கட்டமாக்கினாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் தாயக்கட்டைகளை உருவாக்கினாள். ஆணும் பெண்ணும் ஆடும் வெல்லா வீழாப் பெருவிளையாடல் துவங்கிற்று. என்று பாடினான் ஒரு சூதன். சமந்த பஞ்சகம் எனும் குருக்ஷத்திரத்தின் கொற்றவை ஆலயத்தில் இரண்டாவது சூதன் பாடினான். ஆடலின் வேகத்தில் தெறித்தோடிய கிருதம் என்னும் பகடை பாற்கடலில் விழுந்து, ஆதிசேடனை அறைந்து, விஷ்ணு கண்விழித்தார். அவர் சினங்கொண்ட கணம் மண்ணில் பரசுராமனாய்ப் பிறந்தார். ஒரு நாள் கையில் மழுவுடன் தந்தை ஜமதக்னியின் வேள்விக்கு விறகு வெட்ட வனம் புகுந்தவனை நாரதர் குயிலாய்க் கூவி வழிதவற வைத்தார். அவன் சென்ற அஸ்ருபிந்து நிலத்தில் பளிங்குத் துளிகள் மணலென மின்னின. க்ஷத்ரியர்களின் அநீதியில் வதைக்கப்பட்டவர்களின் கண்ணீர்த்துளிகளே அவை. அவற்றுக்கு நீ