Posts

Showing posts from September, 2010

அகிராவின் ராஷோமோன்

Image
லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது. படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள். கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள

மாலத்தீவின் மாணவர்கள்

Image
இந்த ஆசிரியர் தினத்தில் மாலத்தீவில் ஒரு ஆசிரியனாக எனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த திரு விருட்சம் அவர்களுக்கு நன்றி. மாலத்தீவுகளில் ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. அதுதான் உலக ஆசிரியர் தினம். நாம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றுவதற்காக செப் 5ல் கொண்டாடுகிறோம்.  நான் இங்கு வந்து ஏழு வருடங்களாகிறது. ஓர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியனாகவும், தற்போது துறைத்தலைவராகவும் இருக்கிறேன். இந்நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.  இங்குள்ள மாணவர்களுடன் பழகியதில் அவர்களைப் புரிந்துகொண்டேன் என்று சொல்வதை விட எனக்குள் இருந்த ஆசிரியனை நான் சுத்திகரித்துக் கொண்டேன் அல்லது மீள் உருவாக்கம் செய்து கொண்டேன் என்பதே உண்மை. வகுப்பில் நுழைந்ததும் பதறிப்போய் எழுந்து வணக்கம் சொல்கிற, வகுப்புகள் நடைபெறுகின்ற போது ஆசிரியருக்கு எதிரான எந்தக் கருத்தையும் பேசாத, ஆசிரியர் சொல்வது சில சமயங்களில் தவறேயாயினும் அதை மறுத்துப் பேசாத, எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் மரியாதையோடு விளிக்கிற நம் நாட்

ஜெயமோகன் கட்டுரைக்கு மறுவினை

Image
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு  கீதையும் யோகமும்   குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு கடிதம் எழுதியிருந்தேன் . அந்தக் கட்டுரை பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விட்டது.  அவருக்கு     நன்றி . அந்தக் கடிதத் தொடர்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ( அவர் தவறாக எண்ண மாட்டார் என்றெண்ணி ) அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு , ( உங்கள் கட்டுரைக்கு மறுவினை எழுத வேண்டுமென்று ஆரம்பித்து இந்தக் கடிதம் வரைமுறையின்றி நீண்டு விட்டது. மன்னிக்கவும்) கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் . கீதையை மதிப்பவர்கள் , எதிர்ப்பவர்கள் இருவரிடமுமே நிலவி வரும் தவறான அபிப்ராயங்கள் பற்றி நீங்கள் அற்புதமாக எழுதியிருந்தீர்கள் .  இந்த எதிர்வினையை ஆற்றுவதற்கு எனக்குள்ள தகுதியை முதலில்   சொல்லி விடுகிறேன் . தகுதி இல்லை என்றே சொல்லலாம் . இருப்பினும் கீதையைத் தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதையே   ஒரு தகுதியாக முன்வைக்கிறேன் .  கோயில்களில்   விற்கும்   கீதை பதிப்பைத்தான்   நான் முதலில் வாசித்தேன் . அது பக்தி   மார்க்