Posts

Showing posts from January, 2011

வாசிப்பிற்கான புத்தகங்கள்

இந்த ஆண்டு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது நிறைய நாவல்கள் வாங்க வேண்டுமென்ற முடிவோடு சென்றிருந்தேன். போனபிறகு புத்தி மாறிவிட்டது. தத்துவம் பக்கம் மனம் சாய்ந்து விட்டது. இருப்பினும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டுதான் வந்தேன். சில புத்தகங்களை வாங்குவதற்கு நண்பன் ஜெயச்சந்திரன் உதவினான். வேதாந்தம் மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை வாங்குவதற்கு அவன்தான் எனக்கு வழிகாட்டி. நான் வாங்கிய புத்தகங்கள் 1. பகவத் கீதா – சாதக சஞ்சீவினி இரு பாகங்கள் – ஸ்வாமி ராம்சுகதாஸ் அவர்களின் விளக்கவுரை. 2. உத்தவ கீதா – பொழிப்புரை 3. ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம் ( மேற்கண்ட மூன்றும் கீதா பிரஸ் வெளியீடு. இதோடு சுசீலா ஓர் இலட்சியப் பெண்மணி போன்ற நல்லறிவு கொடுக்கும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கினேன்). 4. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா பதிப்பகம். 5. யயாதி இரு பாகங்கள் – வி. எஸ். காண்டேகர் – அல்லயன்ஸ் பதிப்பகம். 6. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து. 7. இராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்)– இராஜாஜி – வானதி பதிப்பகம் 8. மஹாபாரதம் (வியாசர் விருந்து) – இராஜாஜி – வானதி பதிப்பகம் 9. தர்மத்தின் மதிப்புதான் என்ன? – ஸ்வாமி தயானந்

மானசரோவர்

Image
 மானசரோவர் ஆசிரியர் : அசோகமித்திரன் பதிப்பகம் : கிழக்கு பக்கங்கள் : 207 விலை : ரூ. 90 மானசரோவர்  திரையுலகை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதியுள்ள மற்றுமொரு நாவல். அவரது மிகப் பிரபலமான இன்னொரு நாவலான கரைந்த நிழல்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை என்ற ஒரு அருமையான நாவலை வாசித்தது நினைவுக்கு வருகிறது. மானசரோவரில் அசோகமித்திரனின் கண்களினூடாக நாம் பார்க்கும் திரையுலகம் மட்டுமல்ல, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர்களும், அவர்களின் வினோத குணங்களும் காணக்கிடைக்கின்றன. இரண்டு முறை வாசித்துவிட்டேன். அசோகமித்திரனின் நேர்மையான சொல் முறைக்காகவே மீண்டும் ஒரு முறை படிக்கலாம். இந்தக் குட்டி நாவலை பாகம் பாகமாகப் பிரித்து எழுதியிருக்கிறார். இரண்டு கதை சொல்லிகள் மாறி மாறி ஒவ்வொரு பாகத்திலும் தன்னிலையிலிருந்து கதை சொல்லுகிறார்கள். விறுவிறுப்பாகவும், அதேநேரம் ஆழ்ந்த தத்துவ தளங்களிலும் பயணப்பட்டுச் செல்லும் இந்த நாவலை சாவி வார இதழில் தொடராக எழுதினார் என்றறிய ஆச்சரியமாக இருக்கிறது. (ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வெளியிடச் செய்திருக்க

கடிதங்கள்

அன்புடையீர் , ஸ்வாமிஜியின் வகுப்புகளை வீட்டிலேயே கேட்டுப் பயனடைந்து வருகிறேன் . நான் திருமணமானவன் . எங்களுக்குக் குழந்தைகள் இல்லை . எனக்கும் என் மனைவிக்கும் வேதாந்தம் பயில்வதில் மிகுந்த ஆர்வம் . ஸ்வாமி ஓம்காரானந்த மற்றும் ஸ்வாமி குருபரானந்த இருவரின் வகுப்புகளையும் ஒலி வடிவில் கேட்டு வருகிறோம் .  இருப்பினும் குரு ஒருவர் அருகாமையிலிருந்து பயில ஆசைப்படுகிறோம் . வேதபுரியில் மூன்றாண்டு வகுப்புகள் நடப்பதாக அறிந்தோம் . அதுபற்றிச் சற்று விளக்க முடியுமா . நாங்கள் அங்கு அருகிலேயே வீடு எடுத்துத் தங்கி பயில இயலுமா என்பதைச் சற்று விளக்கவும் . ஸ்வாமியின் பாதங்களுக்கு நமஸ்காரங்கள் . நன்றி . ஜெகதீஷ் குமார். பேரன்பிற்குரிய ஸ்ரீஜகதீஷ் குமார் அவர்களுக்கு, பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள் தங்கள் பரிபூரண நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். தாங்களும் தங்கள் மனைவியும் வேதாந்தம் பயில்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள். தற்சமயம், தேனி ஆஶ்ரமத்தில், மூன்றாண்டு வகுப்புகள் நிறைவு பெற்றுவிட்டன. ஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள் ஜ்ஞாந யஜ்ஞத்திற்காக இடைவிடாது ப

ரெயினீஸ் ஐயர் தெரு

Image
      ரெயினீஸ் ஐயர் தெரு ஆசிரியர் : வண்ணநிலவன் பதிப்பகம் : கிழக்கு பக்கங்கள் : 94 விலை : ரூ. 70 பரிந்துரை: ஜெகதீஷ் குமார்        எ திரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் வாழ்வில் மரியாதையும் நேசத்தையும் கொடுக்கிறோம் என்று நமக்குத் தெரிந்து விடும். காரணங்களற்ற நேசம் யார் மீதும் கொண்டு விடுவதில்லை நாம். நம் சுய நலக் காரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு மட்டுமே அன்னிய மனிதர்களது இருப்பு அவசியமாகிறது நமக்கு. வண்ணநிலவனின் எழுத்தை வாசிக்கும் போது அண்டை மனிதர்களை நேசிக்கத் தவறும் குற்ற உணர்ச்சி இயல்பாகவே நம்முள் எழுகிறது.         சம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படு