Posts

Showing posts from June, 2022

ஜெயகாந்தனின் சுயதரிசனம் வாசிப்பனுபவம்

Image
நன்றி: ஹிந்து தமிழ், ஓவியர் ஜீவா   சிவராமனின் தந்தை கணபதி சாஸ்திரிகள் வீட்டை விட்டுச் சென்று விடுகிறார். சதா நேரமும் சிடுசிடுவென்று இருக்கும் அவன் மனைவி ராஜமும், செருப்புக்கடையில் வேலை பார்க்கும் அவன் தம்பியும், ஏன் அவனுமே கூட இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கணபதி சாஸ்திரிகள் புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவர். கறுப்பாகவும், குள்ளமாகவும் உள்ளவர். பிராமணனுக்கு உரிய தோற்றத்தில் இருப்பவர். ஒன்றரை மாதம் கழித்து அவரிடம் இருந்து சிவராமனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதோடு ஒரு கத்தை எழுதப்பட்ட நோட்டுத்தாள்களும். அதைத் தன் சுயதரிசனமாக எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.நேரமிருக்கும் போது படிக்கச் சொல்கிறார். தன் தந்தையின் பால்ய சினேகிதரான வெங்கிட்டுவையர் அவனிடம் சொல்கிறார். ஒரு நாள் நடுத்தெருவில் வைத்து அவன் தந்தையை அவரது குரு சுந்தர கனபாடிகள் அசிங்கமாகத் திட்டியதாகவும், அதற்கு இப்படிப் பேசுகிறீர்களே நீர் பிராமணரா என்று அவர் கேட்டதாகவும், அதற்கு குரு அவரிடம் காயத்ரி மந்திரத்துக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா, தெரியாமலேயே அதைச் சொல்லி, புரோகிதம் செய்து பிழைக்கிறாயே என்று சொல்லி, அர்த்தம் சொல்லவில்லைய

ஐந்தாவது மருந்து - வாசிப்பனுபவம்

  ஜெயமோகன் ஐந்தாவது மருந்து எய்ட்ஸூக்கு தமிழ் நாட்டில் சித்த மருத்துவத்தின் மூலம் தளவாய் என்பவன் மருந்து கண்டு பிடிக்கிறான்.சித்தமும், அலோபதியும் அடிப்படையில் வேறு எனினும் இப்போதைய சித்த மருத்துவம் அலோபதியின் கூறுகளை உள்ளிழுத்துக் கொண்டது. நமக்குக் கிடைக்கும் சித்த நூல்கள், ஏற்கனவே அழிந்த நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு உருவானவையே.சித்தத்தின் படி, மனித உடல் சம நிலையை இழப்பதே நோய். நோய்க்கு எதிராக உடலைத் தயாரிப்பதே மருத்துவம். எய்ட்ஸ் என்பது உருமாறி வரும் வைரஸால் ஏற்படுகிறது. எனவே சித்தத்தின் ஜீவம், அஜீவம் மற்றும் ரசாயன மருந்துகள் இதற்குப் பயன்படாது. 500 ஆண்டுகளுக்கு முன் தென்காசி ராஜ குடும்பம் ஒரு விநோதநோயால் இறக்கிறார்கள். நோயின் குறிகள் அனைத்தும் அது எய்ட்ஸ் என்று சுட்டுகின்றன. வைத்தியர் எழுதி வைத்த குறிப்புகள் தனது தாத்தாவின் அண்ணன் மூலம் தளவாய்க்கு ஓலைச் சுவடியாக வந்து சேருகிறது. மாம்பழச் சித்தர் ஊருக்குள் வந்து நோயாளிகளை ஆராய்ச்சி செய்கிறார். மூலாதார அக்னி வலுவிழப்பதுதான் நோய்க்குக் காரணம் என்று கண்டறிகிறார். ஆயிரம் ஆண்டுகள் முன் போகர் கருங்குரங்கு ரத்தம், சிறு நீர் கொண்டு மருந்த

பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெ-க்கு எழுதிய கடிதம்

Image
பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார் - ஜெ தளத்தில் அன்புள்ள ஜெ, பூன் இலக்கிய முகாமில் உங்களோடு கழித்த பொழுதுகள் விலைமதிப்பற்றவை. பதினைந்து ஆண்டுகள் எழுத்தின் வழி மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த எனக்கு, தங்கள் சன்னிதியில் அமர்ந்து சொற்கள் வழி பெருகிய ஞான அமுதத்தை வாங்கக் கிடைத்த நல்வாய்ப்பெனவே இவ்விரு நாட்களும் அமைந்தன. இரண்டு நாட்கள் முகாம் முடிந்து வீடு திரும்பியவுடன், முகாமில் நிகழ்ந்தவற்றையும், பரிமாறப்பட்டவைகளையும் மனத்திலிருந்து எடுத்து மீட்டிக் கொள்ளும் சுகத்துக்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். பென்ஸில்வேனியாவின் தென்திசையிலிருந்து மேரிலேண்ட், வர்ஜெனியா வழியாக வடகரோலைனாவிற்குள் ஊடுருவும் ப்ளூரிட்ஜ் மலைத்தொடர்களில் அமைந்த பூன் என்னும் இடத்தில்தான் முகாம் நடைபெற்றது. வியாழன் (12 மே) அன்று மாலையே நண்பர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் எங்கிருந்தெல்லாம் வந்தனர் என்று குறிக்கும் வரைபடத்தைக் குழுவில் பார்த்தபோது வியப்பேதும் ஏற்படவில்லை. இத்தனைக் கயிறுகளையும் இணைக்கும் ஒற்றைப் புள்ளி நீங்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் வெவ்வேறு நேரமண்டலங்களிலிருந்தெல்லாம் நண்பர்க

ஒவ்வொரு துளியும் அமுதம்

Image
  நன்றி கவிதைகள் இணைய இதழ் இயற்கையைப் பாடாத கவிஞர் இல்லை. அதன் இடைவெளியற்ற களி நடனம், கணந்தோறும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உன்னதமான பேரிசை ஆகியன அவர்களை உவகைக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவ்வுவகையிலிருந்து பெருகுகின்றன கவிதைகள். ஆனால் தூய உயிராக இயற்கையை அணுகி அறிதல் என்பது, இப்பேரிருப்பின் ஓர் அங்கமெனவே தன்னை உணர்ந்த, அல்லது தன்னுள்ளேயே இவ்விருப்பின் துடிப்பை உணர்ந்த ஓர் உள்ளத்தால் மட்டுமே சாத்தியமானதாகும். சில வேளைகளில் பேரிருப்பின் நடனத்தை மட்டும் காண வாய்க்கும் சிலருக்கு, எந்த மகத்தான இசைக்கு இந்த ஒத்திசைவின் நடனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய இயலாமல் போய்விடுகிறது. அவ்விசையை அனுபவிக்க முடியாதபடி புலன்களுக்கெட்டாத ஒரு கண்ணாடிச் சுவர் தடுத்துக் கொண்டு இருக்கிறது. எந்தச் செவிகளையும் எட்டாமலேயே இந்த உன்னத இசை வியர்த்தமாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் புலம்புகிறான் கவிஞன். ஆனால் அவ்விசையைச் செவி வழி நுகரும் வழி அவன் அறிவான். புலன்களின் விழிப்பும், உள்ளத்தின் அமைதியுமே இயற்கையை அதன் முழுமையில் தரிசிக்கத் தேவையான தகுதிகள். பிறர் முட்டி மோதியும் தகர்க்க முடியா