Posts

Showing posts from May, 2022

பிரயாணம் - மனிதன் மற்றுமொரு விலங்கே!

Image
  பிரயாணம் - சிறுகதை அசோகமித்திரன் பிரயாணம் - மனிதன் மற்றுமொரு விலங்கே! அசோகமித்திரன்  ஜெகதீஷ் குமார் . இந்த கதையின் முடிவை வாசிக்கையில் வாசகராகிய நமக்கு வாழ்வின் பொருள் குறித்த அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கடைசி வரியில் கதை முடிந்தாலும், அவ்வரியிலிருந்து கதை வாசகன் மனதில், குறிப்பாக அவன் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவனாகவும் இருப்பானாயின், நீண்டு கொண்டே செல்கிறது. இக்கதையின் முடிவு ஒரு ஆங்கிலக்கதையின் பாதிப்பு என்று இணையத்தில் உலவி வருகிறது. நான் அக்கதையை வாசித்ததையும், இரண்டையும் ஒப்பிடும்போது கூட, எனக்கு அ.மியின் கதையே சிறந்ததாகப் படுகிறது. அம்ப்ரோஸ் பியர்ஸினுடைய கதையில் மனைவி இறக்கிறாள் கணவன் உடலைக் காப்பாற்ற ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் மனைவியைக் குதறிவிடுகின்றன ஓநாய்கள். ஆனால் மனைவியின் வாயில் ஒரு ஓநாயின் கடித்துத் துண்டாக்கப்பட்ட காது இருக்கிறது. இக்கதை பிரயாணம் கதையைப் போலவே இருக்கிறது. முடிவை இந்தக் கதையிலிருந்து அசோகமித்திரன் கையாண்டிருக்கிறார். எவ்வகையில் இந்த முடிவு அவரது கதையில் வேறுபடுகிறது என்று பார்க்கலாம். இங்கு ஓநாய்களால் குதறப்பட்டு முண்டமாகக் கிடப்பவர் ஒரு யோக

கானல் நதி - இச்சை எனும் உயிர்க்கொல்லி

Image
கானல் நதி - இச்சை எனும் உயிர்க்கொல்லி கானல் நதி பெரும்புகழ் கொண்ட பாடகனாக ஆகியிருக்க வேண்டிய ஒரு இசைமேதை படிப்படியாகத் தன்னையே அழித்துக் கொள்வதின் துல்லியமான ஆவணம். தனஞ்சய் முகர்ஜி கல்கத்தாவின் சிறு கிராமமான மாமுட்பூரில் பிறந்து வளருகிறான். மிக இளம் வயதிலேயே அவனது இசை மேதைமையைக் கண்டு கொண்ட அவனது தந்தை அவனை உள்ளூர் இசை ஆசிரியர் விஷ்ணு காந்த சாஸ்திரிகளிடம் சேர்த்து விடுகிறார்.இசை கற்கும் பொழுதே சரயு என்ற பெண்ணைக் கண்டு காதலுறுகிறான். அங்கு அவன் பாடம் கற்றபின், குருசரண் என்ற தபலாக் கலைஞன், பணக்காரன், அவன் வீட்டில் தங்கி சாதகம் செய்கிறான். வேலை எதுவும் செய்வதில்லை. கச்சேரிக்குப் போன இடத்தில் குடிப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது. காதலில் தோல்வி ஏற்படுகிறது. சரயுவை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். மனம் உடைந்து, குடி அதிகரிக்கிறது.  இளம் பருவத்திலிருந்தே தனஞ்சய்க்குக் காம உணர்வுகளை அடக்க முடிவதில்லை. சங்கீதம் அவனுக்கு இயல்பாகவே வருகிறது. அவன் பாடிக் கேட்பவரெல்லாம் கரைகிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் இசை குறித்த எண்ணங்களை விட காம எண்ணங்களே அவனை முழுதும் ஆக்ரமிக்கின்ற