அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் வேதாந்தம் குறித்த தொடரின் மூன்றாவது பகுதி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. எந்த ஒரு அறிவையும் ஓர் அறிவைக் கொடுக்கும் கருவியால் மட்டுமே அறிய இயலும். அறிபவனாகவே இருக்கும் என்னை எந்தக் கருவியால் அறிந்து கொள்ள இயலும்? இப்பகுதியில் அறிவைக் கொடுக்கும் கருவிகளான பிரமாணங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிரமாணங்கள் ஆறுவகை. அத்தனைப் பிரமாணங்களையும் பகுதி மூன்று மற்றும் நான்கில் விளக்கப்படும்.
12 ஜனவரி, 2026
6 ஜனவரி, 2026
செயற்பாலது ஓரும் அறன்
அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் சொல்வனம் இதழில் நான் எழுதி வரும் வேதாந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. எதற்காக ஒருவர் அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.
15 டிசம்பர், 2025
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”
1. “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”
சொல்வனம் இணைய இதழில் என்னுடைய புதிய கட்டுரைத்தொடர் துவங்கியிருக்கிறது. அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில். அதனது முதல் அத்தியாயம் “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” அத்வைத வேதாந்தம் பற்றிய சிறு விளக்கத்தையும், அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசுகிறது. இருவாரங்களுக்கொரு முறை இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் வெளியாகும். அத்வைத வேதாந்தம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும், ஏற்கனவே அத்தத்துவத்தைக் கற்றுக் கொண்டவர்களுக்கு வாசித்து அனுபவிப்பதற்காகவும் பயனுள்ள தொடராக இருக்கும் இது.
19 ஜனவரி, 2018
அதுதான் நீ
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
சாதன சதுஷ்டயம் 1 ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி சதுஷ்டயம் என்றால...