Posts

Showing posts from April, 2024

சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை - என் பார்வை

Image
சீதா ராமன் - ஜமீலா கணேசன் கட்டுரை மிக நுட்பமாகவும், விரிவாகவும் எழுதப்பட்ட கட்டுரை ஜமீலா. இலக்கிய நயம் பாராட்டல் கட்டுரைகளுக்குண்டான எல்லா இலக்கணங்களோடும் பொருந்தி வரும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். இஸ்கான் ஊர்வலத்தில் சிறுவர்களுக்குள் பார்த்த வில் சுமந்த ராமன் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய ஓர் எளிய கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாகவே இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது. அன்பே உருவான ராமன், தாடகையை வதம் செய்யத் தயங்கிய ராமன், ராமகாதையின் பிற்பகுதியில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்பட்டான் என்பதுதான் அந்தக் கேள்வி. கட்டுரை ஆசிரியர் சிந்தித்து, ஆராய்ந்து அதன் காரணம் ராமன் சீதை மேல் கொண்டிருந்த காதலே என்ற முடிவுக்கு வருகிறார். அவன் தசரத ராமனோ, கோசலா ராமனோ அல்ல, சீதா ராமனே என்று உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் கம்பனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார். அவனது பாடல்களிலிருந்து, வால்மீகியில் நாம் காண இயலாத காதல் ததும்பும் பகுதிகளை நமக்கு எடுத்து விளக்குகிறார்.  கம்பன் மிதிலைக்குள் நுழைகையில் இருவரும் பார்த்துக் கொள்வதிலிருந்து துவங்கி (That அண்ணலும் நோக்கினான் moment!)

எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

Image
  எரி நட்சத்திரம் - சிறுகதை, பாலாஜி ராஜூ அன்புள்ள பாலாஜி, கதை எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மொழி தீவிரமாகவும், தத்துவார்த்தமாகவும் ஒழுகிச் செல்கிறது. அழகாகக் கதையைக் காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள். உரையாடல்கள் தேர்ந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை வருணனை மிகத் துல்லியமாக வந்திருக்கிறது. நீங்கள் கதையில் சாதிக்க நினைத்ததைச் சாதித்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். மலைகளின் மீது அவருக்கிருக்கும் பிரேமை நன்றாக வெளிப்பட்டிருந்தது. இயற்கை இக்கதையில் ஒரு பாத்திரமாகவே வெளிப்பட்டது. அந்தத் தம்பதிகளின் பயணம் குறித்த குறிப்புகளும் அழகானவை. கதையின் முடிவும் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு சிறுகதைக்குத் தேவையான சின்ன வெளிப்பாடு. “ஆம்” என்று மட்டும் சொன்னேன் - என்ற வரி மிகக் கனமானது. இவ்வளவு சிறிய கதையில் உங்களால் கனமான விஷயத்தைக் கூற முடிகிறது. எனக்குச் சற்றுப் பொறாமை. எரி நட்சத்திரத்தில் துவங்கி அதிலேயே முடிவது கதையை அழகாக்குகிறது. அவர் எரி நட்சத்திரம் பார்த்த அதே வீட்டில், அதே சாளரம் வழியே, கதை சொல்லியும் பார்ப்பது கவித்துவமான தருணம். ஒரு புனைவெழுத்தாளனுக்குரிய மொழி உங்களுக்குக் கைவந

கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை

Image
  கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ அன்புள்ள பாலாஜி, கதை மிகவும் நன்றாக வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை. மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. உங்கள் ஊர் சூழ்நிலையை அப்படியே கண்முன் வரைந்து காட்டியிருக்கிறீர்கள். நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட கதையைப் போல் தெரிகிறது. இதைப் பாராட்டாகவே சொல்கிறேன். கதையின் ஒவ்வொரு பகுதியிலும் முழுமை கூடியிருக்கிறது. கிணற்றை ஒரு படிமமாக மாற்ற நீங்கள் எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது நல்லது. எனவே கிணறு இயல்பாகவே படிமமாகி விட்டிருக்கிறது. ஊரின் மக்களும், அவர்களது வாழ்வியலும் அழகாக, நேர்த்தியாக, அவற்றுக்கான தனித்துவம் மிக்க சொற்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாசிக்க மிகச் சுகமாக இருந்தது. லாரி ஓட்டும் மலையாளிகள் குளிக்கும் உப்புத்தண்ணிக் கிணறு அவர்களைக் காவு வாங்கி விடுவதைக் கதையாக்கி இருப்பது சிறுகதை வடிவம் குறித்த உங்களது போதத்தைக் காட்டுகிறது. நேரடியாகக் கதை சொல்லல் முறையைக் கையாண்டிருக்கிறீர்கள். உண்மையில் இப்படிச் சொல்வதுதான் கடினம். எனக்கு எந்தக் குறையும் கண்ணில் படவில்லை. இது ஆகச் சிறந்த கதையா என