Posts

Showing posts from February, 2021

முதற்கனல் - அத்தியாயக் குறிப்புகள்

  நாகர் குலத்தலைவி மானசா தேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு, தன் குலக்கதையும், அவன் ஜரத்காரு முனிவருக்கு எப்படிப் பிறந்தான் என்பதையும் சொல்கிறாள். ஆஸ்திகன் தன் அன்னையை விட்டு அஸ்தினாபுரம் செல்கிறான். அஸ்தினாபுர வர்ணணை- மன்னன் ஜனமேஜயனின் யாகத்தின் இறுதி நாள் - யாக ஏற்பாடுகள். மன்னர் வருகை. சர்ப்பசத்ர வேள்விக்கான காரணம் - ஜனமேஜயன் பகடையாட்டத்தில் ஈடுபட்டு கட்டுண்டு கிடந்தான் - ரிஷி உத்தங்கர் வருகையைக் கவனியாது இருந்தான் - அவர் சினங்கொண்டு திரும்பினார்- நாகங்களால்தான் உன் குலத்துக்கே அழிவு என்றார் - அவரை நள்ளிரவில் அவர் குடிலில் சென்று சந்தித்து தன் குலக் கதையை சொல்லுமாறு வேண்டினான். குருக்ஷேத்ரப் போரில் அபிமன்யு மாண்டான் - அவன் மனைவி உத்தரை பரீட்சித்தைப் பெற்றெடுத்து மாண்டாள்- அவர் அவன் தந்தை பரீட்சித்தின் கதையைச் சொன்னார்-  புதல்வர்கள் பிறந்தபின்னும் அரசப் பொறுப்பு ஏற்காமலே இருந்தான்.வேட்டையாடி அலைந்தான்-சமீக முனிவரை வனத்தில் கண்டு அவர் பேசாதது குறித்துக் கோபம் கொண்டு ஒரு பாம்பை அடித்து அவர் கழுத்தில் போட்டான் - அவர் மகன் கவிஜாதன் குரங்குருவில் அவனிடம் வந்து நாகங்களின் சாபத்தை அவனிடம் சொன்னான்.