Posts

Showing posts from October, 2012

விஷ்ணுபுரம் - ஜெயமோகனுக்குக் கடிதம்

Image
அன்புள்ள ஜெ, உள்ளே இருப்பவர்கள் வாசித்தேன். விஷ்ணுபுரம் தரும் அதிர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. நண்பர்கள்  விஷ்ணுபுரம் தந்த அனுபவங்களைத் தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதை நோக்கியபடியே இருக்கின்றேன். விஷ்ணு புரத்தை நான் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இரண்டாவது முறை வாசிக்காமல் அது பற்றி எதையும் விவாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். நாவலை இந்தியாவில் வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் வாசிப்பதற்கென்று கொண்டு வருகிற புத்தகங்களின் எடை வாசித்த நூல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதைத் தவிர்த்து விடுகிறது. முதல் வாசிப்பில் விஷ்ணுபுரம் கொடுத்த அனுபவம் வினோதமானதும் அலாதியானதும் ஆகும். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் நூறு பக்கங்களை வாசித்து முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆயின. (விட்டு விட்டு வாசித்ததால்) மீதி இருந்த எழுநூற்றி சொச்சம் பக்கங்களை பதினைந்து நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். எனக்கென்னவோ விஷ்ணுபுரம் என்ற நாவல் ஒரு சிறுகதையின் விரிந்த வடிவம் போலத்தான் தோன்றுகிறது. வாசிப்பு சுகத்திற்கும், ஸ்வாராஸ்யத்திற்கும் துளிக்கூட ப