நண்பரும், கவிஞரும் , இலக்கிய விமர்சகருமான பாலாஜி ராஜூவிடம் என் கதைகளையும், ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் அவைகளை இதழ்களுக்கு அனுப்பு முன்பே பகிர்ந்து கொள்வேன். மனம் வலிக்காமல் விமர்சிப்பதில் வல்லவர் அவர். அவர் என் கதைகளுக்கு அளித்த விமர்சனங்களை அவரது தளத்தில் வெளியிடுகிறார்.
26 அக்டோபர், 2022
என் சிறுகதை பேராசிரியரின் கிளி சொல்வனம் இதழில்
என் சிறுகதை பேராசிரியரின் கிளி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் ஆசிரியர்கள் பாஸ்டன் பாலா மற்றும் மைத்ரேயன் ஆகியோருக்கு நன்றி.
26 செப்டம்பர், 2022
கல்லளை - சிறுகதை - சொல்வனம் இதழில்
என் புதிய சிறுகதை கல்லளை சொல்வனம் 279 வது இதழில் வெளிவந்துள்ளது. ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி.
கல்லளை
"என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது.
8 செப்டம்பர், 2022
பிறப்பொக்கும், கர்மா விமர்சனம்
நண்பர் ஜமீலா எனது பிறப்பொக்கும், கர்மா ஆகிய சிறுகதைகளை வாசித்து விட்டு வாசிப்பனுபவமும் விமர்சனமும் எழுதியிருந்தார். அவரது விமர்சனம் கீழே
கர்மா சிறுகதை சொல்வனம் இதழில்
என் சிறுகதை கர்மா சொல்வனம் இதழின் 277வது பதிப்பில் வெளிவந்துள்ளது.
ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி.
தன் புல்வெட்டியில் ஏதோ தவறு இருந்தமாதிரிப் பட்டது பீட்டருக்கு. ஐந்தடிக்கு ஒருமுறை திக்கித் திணறிக் கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்தி விட்டு, தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார். வெட்டுப்பட்டிருந்த புற்கள் ஒட்டியிருந்தது தவிர வேறெதுவும் பழுதாகத் தெரியவில்லை. அப்புற்களின்றும் வெளிவரும் பச்சை மணத்துக்காகவே பீட்டர் புல்வெட்டுவதென்றால் உற்சாகமாகத் தயாராகி விடுவார். எந்திரத்தில் கேசோலினும் அளவுக்கதிகமாகவே இருந்தது. மூன்று முறை நிறுத்தி, நிறுத்திப் பரிசோதித்து விட்டார். அவரால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சலித்துப் போய், இயந்திரத்தைக் கொண்டு போய் கராஜில் நிறுத்தினார்.
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
சாதன சதுஷ்டயம் 1 ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி சதுஷ்டயம் என்றால...

