26 அக்டோபர், 2022

என் சிறுகதை பேராசிரியரின் கிளி சொல்வனம் இதழில்

 என் சிறுகதை பேராசிரியரின் கிளி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் ஆசிரியர்கள் பாஸ்டன் பாலா மற்றும் மைத்ரேயன் ஆகியோருக்கு நன்றி.




ஆர்தர் ரேவனல் ஜூனியர் பாலத்தைத் தாண்டியபிறகு, 21ம் எக்ஸிட் எடுத்து டிராஃபிக் சிக்னலில் நின்றபோது இடது பக்கம் திரும்ப வேண்டுமா அல்லது வலது பக்கமா என்று ஸ்ருதிக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஸ்ருதி தன் காரை கோல்மன் புலவார்டுக்குள் திருப்பிய மறுகணமே திசைகாட்டும் கருவியின் பெண்குரல் அமைதியடைந்து, அவளது அலைபேசியின் தொடுதிரை கடைசியாகக் காட்டிய வரைபடத்துடன் உறைந்து விட்டது. கூகுள் வரைபடத்தில் கூட அவளது பேராசிரியரின் வீடு பட்டியலிட்டிருக்கப்படவில்லை!



மேலும் வாசிக்க