நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான யாமம் பற்றி நான் எழுதிய பரிந்துரையை சில நாட்கள் முன்பு அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அவர் படித்து விட்டு எனக்கு இன்று பதில் எழுதியிருந்தார்.
அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பு ஜெகதீஷ்
யாமம் பற்றிய உங்கள் விமர்சனம் மிக நன்றாக உள்ளது, நுட்பமாக வாசித்து எழுதியிருக்கிறீர்கள்
உங்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி
மிக்க அன்புடன்
எஸ்ரா
நீண்ட நாட்களுக்குப் பின் எனக்கு வாசிப்பிலும் எழுதுதலிலும் ஆர்வம் மீண்டதற்கும், நல்ல திரைப்படம் பற்றி நான் அறிந்து கொண்டதற்கும் அவரது எழுத்துக்கள் ஒரு காரணம்.
நான் எழுதிய யாமம் பரிந்துரை