ஏப்ரல் 2025 முழுவதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையில் என் சிறுகதைகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்தது. நண்பர்கள் என் பல்வேறு சிறுகதைகள் குறித்த பார்வையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர். அவர்களுக்கு என் நன்றி.
மேற்காணும் ஓவியம் என் நண்பரும், ஓவியருமான அருண்குமார் அருணாசலம் நீலத்தழல் கதைக்கென்றே பிரத்யேகமாக வரைந்தது. அருண் எழுத்தாளர் இரா. முருகனின் மிளகு நாவல் சொல்வனம் இதழில் தொடராக வெளிவந்தபோது அதன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அற்புதமான ஓவியங்களைத் தீட்டிப் புகழ்பெற்றவர். சில அமெரிக்க நாவல்களின் அட்டைப்படங்களையும் வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கிறார்.
நீலத்தழல் சிறுகதை குறித்து நண்பர்களின் கருத்துக்கள்
Prasad Venkat
Is there a burned out middle-class immigrant caught in the rat race who doesn't romanticize a lush past? Prasad, (no relation to me) a high school math teacher in Maldives (probably some relation to a member of this group) fumes to his wife about how many balls he has to juggle to pay his monthly mortgage:
> எத்தனை விஷயங்களை விட்டு விட்டு இங்கு வரவேண்டி இருந்திருக்கிறது? நண்பர்கள், உறவுகள், உணவு, சினிமா, கிரிக்கெட், அரசியல், தீபாவளி, பொங்கல், காளியம்மன் கோயில் மாசித் திருவிழா. எல்லாம் காசு சேர்க்கவும், கடனடைக்கவும் தானே. இங்கு வரும் முன் அங்கு சொற்ப ஊதியத்தில்தானே வேலை பார்த்தோம்? செத்தா போய்விட்டோம்?
Prasad's colleague Varun encourages him to take a break and go fishing in the middle of the night. While the story hints at bioluminescence early on, making the eventual reveal unsurprising, I was pleasantly surprised at the power of the imagery Jegadeesh paints:
> திடீரென்று தங்கத் துகள்கள் போல ஒளிப்பைகள் வெடித்துச் சிதறுவதைப் பார்த்தான். ஏதோ அவனுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கிக் கொண்ட கனவுலகில் நுழைந்ததைப் போலிருந்தது.
> அவனுக்கு எதிரில் ஒரு நாலைந்து டால்ஃபின்கள் மின்னும் நீலஒளியை உடலெங்கும் பூசிக்கொண்டு நீந்திப்போயின. நீலத்திரையைக் கிழித்து நீருக்குள் பாய்ந்து, பின் வெளிவந்து கடற்பரப்பின் மேலாகப் பாய்ந்தன. கனவு இன்னும் அற்றுவிடவில்லை.
The man who starts his fishing trip worried about bioneeds (நடுக்கடலில் வயிறு கலக்கினால் என்ன செய்வது என்று பிரசாத்துக்குக் கவலையாக இருந்தது) comes back with a new appreciation and gratitude for what this world has to offer now. Jegadeesh (who dedicates his collection of stories to a Swami) asks us to tamp down future worries and past regrets and instead cultivate gratitude and appreciate the simple joys of life.
Nicely done!
பிரசாத் வெங்கட்
Nirmal
Porkugai ragasiyam வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு மத்தியில் கனவுகளை காப்பது என்பது வேறு உலகத்திற்கு தப்பிப்பது அல்ல, மாறாக இந்த உலகில் வாழ்வதற்கான வலிமையைக் கண்டெடுக்க என சொல்லும் கதை. பாலு என்னும் பாத்திரம் வழியே சித்தப்பா, பாட்டி, காயத்ரி, மீனா அக்கா என பல பாத்திரங்களை கதை காட்டுகின்றது. ஜெகதீஷ் புத்தகத்தின் தலைப்பாக சொன்ன கதை.
ஜெகதீஷின் நீலத்தழல், ஊனுடல் இரண்டிலும் ஒரு ஸ்பெஷல் என்னவெனில் அது மாலத்தீவின் கலாச்சாரம், மக்கள் மனதை பிரதிபலிக்க கூடியது. தமிழில் மாலத்தீவு வாழ்வினை பதிவு செய்த கதை ஆசிரியர் ஜெகதீஷ் மட்டுமே என்று நினைக்கின்றேன்.
Nirmal