Posts

Showing posts from September, 2012

அ.முத்துலிங்கம் - கடிதம்

Image
அன்புள்ள அ . மு .   கட்டுரைக்கு மிக்க நன்றி . அங்கதம் கலந்த , சிந்திக்க வைக்கும் கட்டுரை . இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த குருட்டுத்தனம் அமர்நாத் போன்ற மகத்தான இடங்கள் மட்டுமல்லாது , மத வழிபாட்டுக்குரிய எல்லா இடங்களிலுமே தொடர்கிறது . மற்றொரு புறம் தொழிற்சாலைகள் கழிவுநீரை நதிகளில் கலந்து விடும் திருட்டுத்தனம் . காலச்சுவட்டில் என் பெயர் சிவப்பு மொழிபெயர்ப்பாளர்களிடம் தாங்கள் கண்டிருந்த பேட்டி சுவாரசியமாகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது . மொழிபெயர்ப்பு என்பது இவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டுகிற பணி என்பதை அறிந்து மிகவும் வியந்தேன் . அதேபோல் ஜெயமோகனிடம் தாங்கள் ஊமைச்செந்நாயை அவர் எழுதிய விதம் குறித்து நிகழ்த்திய உரையாடலும் ஓர் எழுத்தாளன் மனம் எவ்வாறு சிந்திக்கிறது ; சக எழுத்தாளர் அவரிடம் என்ன தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது . நான் தங்கள் தளத்துக்கு அவ்வப்போது வருவதுண்டு . உங்கள் சிறுகதைத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை வாசித்திருக்கிறேன் . என் மனம் கவர்ந்த உங்கள்

ஜெயமோகனின் இரு சிறுகதைகள் குறித்து

Image
அன்புள்ள ஜெ இன்றைக்கு உங்கள் தளத்தில் இரு கதைகள் வாசித்தேன். இரு கலைஞர்கள் மற்றும் தேவதை. யதேச்சையாகத் தேர்வு செய்து வாசித்ததுதான். ஆனால் வாசித்தபிறகுதான் இரு கதைகளுமே ஒரே மாதிரியான உத்தியில் எழுதப்பட்டு இருப்பதை அறிந்து என்னை வியந்து கொண்டேன். இரு கலைஞர்களில் முதல் கலைஞரை முதல் வார்த்தையிலேயே அடையாளம் கண்டு விட்டாலும், இரண்டாவது கலைஞர் முதலில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தேன். ஆனால் என் அனுமானம் பொய்யாகி, அவர் யாரென்று அறிந்து பரபரப்பாக வாசிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளை வச்சுருக்கிறவனால அப்படி சாதாரணமா அழுதிர முடியாது என்று கருணாகர் சொல்லுவது எழுதுபனுக்கு இருக்கிற ஆதாரமான பிரச்சினைதானா? எதையும் புனைவுத்தன்மையோடே அணுகும் அவனுக்குத் தன் உணர்வுகளின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திடும் வாய்ப்பு அற்றுப் போகிறதா? மேலும் யுவராஜ் அழுதது கள்ளத்தனம் கொண்டுதான் என்று கூறப்படுகையில் – இதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை – தனக்குள் கள்ளத்தனம் இல்லை என்று நம்பும் யுவராஜுக்கு அதிச்சி ஏற்படுவது, அவரது அஹங்காரம் இன்னும் அழியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? எளிமையான நடையில் சொல்லப்பட