Posts

Showing posts from July, 2010

தியானப்பாதை

எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்கும் எல்லாருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஆன்மீக ஈடுபாடு ஏற்படத்தான் செய்கிறது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோவைப் படித்த போது அவரது புரட்சிகரமான கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன. இப்போதிருக்கும் வணிகத் துறவிகளுக்கெல்லாம் அவர்தான் முன்னோடி என்று சொல்வார்கள். சிலர் மஹரிஷி மஹேஷ் யோகியைச் சொல்வார்கள். பீட்டில்ஸ் பாடகர்களை அவர் ஈர்த்ததிலிருந்து அவர் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானார். ஆனால் இந்தியாவில் அவர் அவ்வளவு பிரசித்தம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். முதலில் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கப்பட்ட ஓஷோ பிரபலப்படுத்திய  ஜென் தியானமுறைகள், நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது அவர் வீசிய கலகக்கேள்விகள், இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு அவரால் மட்டுமே கொடுக்கப்பட முடியுமென்று அவர் உறுதியளித்த ஞானோதயம் மற்றும் இன்னபிற அனைத்துத் தொழில்நுட்பங்களும் சில பல மாற்றங்களோடு அப்படியே இன்றுள்ள வணிகத் துறவிகளால் பின்பற்றப்படுகின்றன.      தியானம், யோகா என்று நான் முதலில் இறங்கியது ஈ

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்

Image
பதிப்பகம்: உயிர்மை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரை: ஜெகதீஷ் குமார். உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் எஸ் . ராமகிருஷ்ணனின் நாவலான யாமம் சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன் .   ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சில சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின் அவ்வீட்டின் விளக்குகளின் சுடர்கள் அனைத்தும் ஒன்று கூடி அம்மனிதர்களின் குண இயல்புகளையும் , ஆசைகளையும் , ஏக்கங்களையும் பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று   நாவலின் முன்னுரையில் எஸ் . ரா குறிப்பிடுகின்றார் .  அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரம் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது .  யாமம் என்பது ஒருவகை அத்தரின் பெயர் . எந்நேரத்திலும்