Posts

Showing posts from February, 2013

வாசிப்பு

வாசிப்பு பழக்கம் நீண்ட நாள் கழித்து தற்போதுதான் கொஞ்சம் கை கூடியிருக்கிறது . தொலைக்காட்சியிலிருந்தும் , குறிப்பாக   கிரிக்கெட்டிலிருந்தும்   வெளி   வருவது சிரமமாக இருப்பினும் , ஒரு நாளைக்கு ஐம்பது பக்கங்களாவது வாசித்து விடுவது பழக்கமாகி விட்டது . பெரும்பாலும்   நாவல்கள்தான்   வாசிக்கிறேன் .   இணையத்தில் வாசிக்கும் கட்டுரைகளைக் கணக்கில்   கொள்ளுவதில்லை . இணையத்தில் தினமும் ஜெயமோகனின் தளத்துக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது . தினமும் ஏதேனும் ஒரு நல்ல   கட்டுரையாவது கொடுத்து விடுகிறார் . அப்படியும் இல்லையெனில் அவரது தளத்தை மேய்ந்து பழைய கட்டுரைகளை வாசிக்கிறேன் . பெரும்பாலும் இலக்கியக் கட்டுரைகள் . எவ்வாறு வாசிக்க வேண்டும் என்றும் , எவற்றை வாசிக்க வேண்டும் அவை ஆற்றுப்படுத்துகின்றன . அடுத்ததாக அடிக்கடிச் செல்லும் தளம் எஸ் . ராமகிருஷ்ணனுடையது . தவறாமல் சாரு நிவேதிதாவின் தளத்துக்கும் செல்கிறேன் . வீண் வம்புக்கு ஆசைப்படும் மனத்தின் ரகசிய ஆசை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் .  ஆனால் இணைய வாசிப்பை விட புத்தக வாசிப்புதான