Posts

Showing posts from March, 2010

அத்வைதம்

Image
ஒன்றுமற்றதிலிருந்து ஓர் புள்ளியாய்த் தோன்றி வெடித்தேன் சிதறுண்டேன் பிரபஞ்ச வெளியாய் பால் வீதியாய்ப் பரவினேன் என் பிரம்மாண்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காய் உடலுக்குள் குடிபுகுந்தேன் தனிமை வாட்ட துணை வேண்டி என் விலா எலும்பைப் பறிகொடுத்தேன் கூடி முயங்கினேன் நுரைத்துக் குமிழ்களாய் பெருகினேன் குமிழ்கள் என்னைச் சூழ்ந்து கொள்ள மூச்சுத் திணறிற்று உடல் என்னும் உடை சிறையாகிப் போயிற்று ஒன்றுமற்றதிலிருந்து எல்லாம் ஆனேன் எல்லாம் ஆனபின் என்னைத் தேடினேன் தேடித் தீர்ந்தபின் உண்மை உணர்ந்தேன் இரண்டற்றதாய் நானே இருந்தேன்

கடவுள் அறிதல்

Image
தேர்வில் மதிப்பெண் வர பிள்ளையார் முன் தேங்காய் உடைத்ததுண்டு. படக்கதைகள் படித்து சக்தி மிக்கவர் விஷ்ணுவா விநாயகரா ஒப்பிட்டதுண்டு. கல்விக்கண் திறந்ததால் கடவுளர் பலரல்ல ஒன்றெண்டு தேர்ந்ததுண்டு. கர்த்தர் முன் மண்டியிட்டு கண் மூடிக்கதறியதுண்டு. கால் முட்டி தேய்ந்ததுண்டு. நீயே கடவுள் உன்னை உணர் ஆன்மாவை அனுபவி அத்தனையும் தெளிவாகும் குண்டலினி துளைத்தால் மண்டைக்குள் ஏதோ மலரும். யாராரோ சொல்லியதை எனதென்று ஏற்றதுண்டு. கடவுள் உலகம் எல்லாம் கற்பனை இருப்பது சூன்யம் ஒன்று மட்டுமே என்றான் புத்தன் திகைத்தேன் சூன்யம் பார்க்கிற ஆள் யாரப்பா? சூன்யம் மறைந்தால் அவனும் மறைவானோ?

உள்ளொளி

Image
இருளில் தேடுகிறேன். இருளின் குழந்தைகள் துணை நிற்க. உள்ளே இருப்பது ஒளி காணும் ஆர்வமா? ஒளி பார்க்கும் நப்பாசையா? விளக்கின் மேல் நம்பிக்கை விளக்கைச் சமைக்குமா? இருளைக் கொல்ல ஒளியே தேவை. இருளின் வாசமே நிரந்தரம் எனில் ஒளியின் வேட்கை எப்படி என்னுள்? ஒளி மட்டும் கற்பிதமல்ல. இருளும்தான்.

சாதன சதுஷ்டயம் - 5

Image
ஸமாதானம் மன ஒருமுகப்பாடு. சித்தஸ்ய ஸ்தைர்யம். ஏகாக்ர: யோக சாஸ்திரம் இதையே ஸமாதி: என்கிறது. தியானிக்க வேண்டிய பொருளில் இருக்க வேண்டிய மன ஒருமுகப்பாடே ஸமாதானம் எனப்படுகிறது. ஸமாதானத்தை அடைவதற்கான உபாயம் என்ன? 1. வைராக்யம் அதிகரித்தல் வேண்டும். 2. முமுக்ஷுத்வம் – அடைய விரும்பும் பொருளில் ஆர்வம். 3. அப்யாஸம் – மனதை ஒருமுகப்படுத்தி தொடர்ந்து பயிற்சி செய்தல். தியானப் பயிற்சி. 4. த்ருதி: - உறுதி. உறுதியாக இருந்து பழகுதல். செய்ய வேண்டும் என்று முடிவு செய்த விஷயங்களை உறுதியோடு நின்று செய்து முடிக்க வேண்டும். ஸமாதானத்தை அடைவதன் பலன் என்ன? 1. மனோ பலம் – மோஹம் (குழப்பம்) என்ற எதிரியிடமிருந்து நம்மைக் காப்பாற்றும். 2. ஸ்ரவண நிஷ்டா – சாஸ்திரத்தை முழுமையாகக் கூர்ந்து கேட்போம். முமுக்ஷுத்வம் மோக்ஷம் வேண்டும் என்கிற தீவிர ஆசை. தீவிர இச்சா. இச்சை என்றாலே நம்மைச் செயலில் தூண்டும் அளவுக்கு வளர்ந்த ஆசை என்று அர்த்தம். ஜானாதி – ஆசைப்படுதல் – செயல்படுதல் அறிதல் – இச்சதி – யததே. முமுக்ஷுத்வத்தின் இருபடிகள் 1. மோக்ஷத்தை அடையும் ஆசை. 2. மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொள்ளல். மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொ

சாதன சதுஷ்டயம் - 4

Image
திதிக்ஷா திதிக்ஷா என்ற சொல்லுக்குப் பொருத்துக் கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல் என்றுபொருள். த்வந்த்வ ஸ்ஹிஷ்னுத்துவம் அதாவது, குளிர், வெப்பம், மானம், அவமானம் போன்ற எதிரெதிர் அனுபவங்களான இருமைகளை சகித்துக் கொள்ளுதல். அசிந்தயா சஹனம் – acceptance. மனதளவில் குறை சொல்லாமல் எதையும் செய்தல். துன்பம் வரும்போது அதை நீக்க முழு முயற்சி செய்ய வேண்டும். அதை நீக்கும் போதும் அதன் பின்னரும் பொறுமையாக இருக்க வேண்டும். திதிக்ஷாவை அடைவதற்கான உபாயம் என்ன? பொறுமையைப் பழகியே பொறுமையாக இருக்க வேண்டும். எதை மாற்ற முடியாது என்று தெரிகிறதோ அதைப் பொறுத்துக் கொள்ளும் அறிவைப் பழக வேண்டும். மாற்ற முடியுமெனில் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். மாற்ற முடியாத துன்பங்களை தவமாகப் பாவித்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கஷ்டத்தை தாங்கும் சக்தியுடையவனே பலமுள்ளவன். நாயமாத்மா பலஹீனேன லப்யதே – இந்த ஆத்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை என்று கீதையில் பகவான் கூறுகிறார். முமுக்ஷுத்வம் – மோக்ஷத்தை அடையும் விருப்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளுதல். உபேக்ஷா – indifference கஷ்டத்தைக் கொள்ளாமல் இருத்

சாதன சதுஷ்டயம் - 3

Image
ஷமாதி ஷட்க ஸம்பத்தி: ஷமம் ஷமம் என்ற சொல்லுக்கு மன அமைதி அல்லது மன ஒடுக்கம் என்று பொருள். ஞானத்தை அடையும் பிரதானமான கருவி மனம். மனம் ஒரு கருவி. அது என்றுமே கர்த்தாவின் கையில்தான் இருக்க வேண்டும். புத்திதான் கர்த்தா. மனம் கருவி. புத்தியின் சொல்படி மனம் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும். பதிவுகளை எடுத்துக் கொண்டு சதா சஞ்சலப்படும் மனம் ஞானத்துக்குரிய கருவி அல்ல. எந்த சாதனைகளை மேற்கொண்டு மனதை நம் வசப்படுத்த முடியும்? வைராக்யம் அடுத்த சாதனையான தமம். மனதை ஒழுங்குபடுத்த கீதையில் பகவான் வைராக்யம், அப்யாஸம் என்ற இருவித உபாயங்களைக் கொடுக்கிறார். நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், தீய பண்புகளை நீக்குதல். வாய்மை என்னும் குணம் மனதை அமைதிப்படுத்தும். தேவையற்றவைகளை நினைக்காதே என்று மனதுக்கு ஆர்டர் போட வேண்டும். த்யானம், ஜெபம் பழகுதல். மனதை அமைதிப்படுத்துவதால் கிடைக்கும் பலன் என்ன? வைராக்யத்தை அதிகப்படுத்தும். இந்திரியக் கட்டுப்பாடு வரும். ஞானயோகம் மனதைக் கொண்டு செய்யும் ஒரு சாதனை. எனவே மன அமைதி ஞானயோகத்துக்குத் துணை செய்யும். மன அமைதியே ஒரு பலன். ஷமம் தமம் போன்ற குணங்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்யும். இதற்கு

சாதன சதுஷ்டய சம்பத்தி - 2

Image
வைராக்யம் ராக: என்றால் பற்று, ஒட்டிக் கொள்ளுதல் என்று பொருள். விராக: என்றால் பற்றின்மை, பற்று நன்றாகப் போய் விடுதல் என்று பொருள். எனவே வைராக்யம் என்பதற்கு பற்று நீங்கிய தன்மை, பற்றை விட்ட தன்மை உடையமனநிலை என்று பொருள். வைராக்யம் என்பது ஒரு செயலன்று. அது ஒரு சாத்யம். A state of mind. எதில் பற்றற்ற தன்மை இருக்க வேண்டும்? “இக அமுத்ர போகே விராக:” இந்த உலகிலும், பிற உலகங்களிலும் இன்பத்தைக் கொடுக்கும் பொருட்களில் விருப்பமில்லாது இருத்தலே வைராக்யம் எனப்படும். இவ்வுலகப் பொருட்களை சாஸ்திரம் இரு வகையாகப் பிரிக்கிறது. ஒன்று த்ருஷ்டம் அதாவது பார்க்கப்படும் பொருட்கள். மற்றொன்று ஸ்ருதம். கேட்கப்பட்ட பொருட்கள். இவ்விரு வகையான பொருட்கள் மீதும் பற்றின்றி இருத்தலே வைராக்யம். பற்றின்மையும், வெறுப்பும் ஒரே விதமான குணங்கள் அல்ல. பொருட்கள் கொடுக்கும் இன்பத்திற்கு அடிமையாகாமல் இருத்தலே பற்றின்மை ஆகும். வைராக்யத்தை எந்தெந்த உபாயங்களின் மூலம் அடையலாம்? வைராக்யத்தின் மூல காரணம் விவேகம் ஆகும். ஆனால் விவேகமே வைராக்யத்தைக் கொடுத்து விடாது. எனவே கீழ்க்காணும் உபாயங்களை மேற்கொள்ள வேண்டும். 1. விவேக அப்யாஸம் அடைந்த அற

சாதன சதுஷ்டய சம்பத்தி - 1

Image
சாதன சதுஷ்டய சம்பத்தி விவேகம் விவேகம் என்ற சொல்லுக்குப் பின் வரும் பொருள்கள் உண்டு. (1) ப்ருதக்த்வேன ஞானம் – பிரித்துப் புரிந்து கொள்ளுதல் பிரித்துப் புரிந்து கொள்ளுதல் எனும் போதே இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள் கலந்திருக்கின்றன என்று அர்த்தம். (2) விஷேஷ ரூபேண ஞானம் – தெளிவாகப் புரிந்து கொள்ளுதல். (3) அன்யோன்ய தர்ம (அ) வ்யாவர்த்த ரூபேண ஞானம் – ஒரு விதமான வஸ்து மற்றொன்றுடன் கலந்து விடாமல் புரிந்து கொள்ளுதல். (4) விசாரம் – ஆராய்தல் (5) சத்வ சுத்தி: - மனத்தூய்மை. வேதாந்தம் என்பது ஒரு கண்ணாடியைப் போல. அந்தக் கண்ணாடி முன் நின்றால் அதுநம் மனதையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் தத்துவத்தையும் காட்டும். அந்தக் கண்ணாடி முன் நிற்கையில் நமக்கு ஒரு சுய அறிவு வேண்டும். ஒரு ஸ்லோகம் சொல்கிறது. இரு கண் அற்றவர்க்குக் கண்ணாடி எவ்விதம் உதவும்?யாருக்கு சுய அறிவு இல்லையோ அவனுக்கு சாஸ்திரம் எவ்விதம் உதவும்? அந்த சுய அறிவே விவேகம், சுயம் ப்ரக்ஞா எனப்படுகிறது. தர்க்க சாஸ்திரம் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணத்தையும் ஞானம் என்கிறது. அதிலும் யதார்த்த ஞானம் மற்றும் அயதார்த்த ஞானம் என்று இருவிதமான ஞானம் உண்டு.எவ்வித

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

Image
சாதன சதுஷ்டயம் 1 ஓம் ஸஹனா அவது ஸஹனௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினா வதீதமஸ்து மாவித் விஷாவஹைஹி ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி சதுஷ்டயம் என்றால் நான்கினுடைய சேர்க்கை என்று பொருள். சாதன சதுஷ்டயம் என்றால் நான்கு சாதனைகளின் தொகுப்பு என்பது பொருள். வேதாந்தத்தின் முதல் மற்றும் முக்கியமான படி இது. இந்த நான்கு சாதனைகளும் ஒரு மனிதன் தன் இறுதி இலக்கான மோக்ஷத்தை அடைவதற்கான அடிப்படைத் தகுதிகளாகும். சங்கரர் இந்த உலகிற்கான லக்ஷணம் கொடுக்கையில், சாதன சாத்ய சொரூபம் ஜகத் என்றார். எனவே இவ்வுலகில் அனைத்து விஷயங்களுமே வெவ்வேறு சாதனைகளின் மூலம் அடையப் பெறும் சாத்யங்களின் தொகுப்பாகவே உள்ளன. சாத்யம் என்றால் என்ன? சாதனேன ஆப்யம் சாத்யம். ஒரு சாதனையினால் அடையப்படுவது சாத்யம். வாழ்வில் நாம் எதை அடைய வேண்டுமென்றாலும் சாதனையின் மூலமாகத்தான் அடைய முடியும். சாதனையின்றி சாதிப்பார் இல்லை என்பது முதுமொழி. சாத்யத்தின் மற்றுமொரு விளக்கம் – எது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அது சாத்யம் எனப்படுகிறது. இதற்குப் புருஷார்த்தம் என்று பெயர். சாத்யத்தை தேர்ந்தெடுப்பதில் நமக்கு CHOICE உண்டு. ஆனால் சாதனையில் நமக்கு CHOICE கிடையாது.