Posts

Showing posts from April, 2010

வண்ணதாசனின் சிறுகதை உலகம்

Image
வண்ணதாசனின் கதைகள் எப்போதும் மிக நீண்ட உரைநடைக் கவிதைகள் போலவே தோன்றும் . அவரது கதைசொல்லும் முறையும் வர்ணனைகளும் ஒரு அழகான லயத்தோடு நம்முடன் பயணிக்கும் . கதைபடித்து முடித்தவுடன் , வண்ணத்துப் பூச்சியை பிடித்துப் பின் விடுதலை செய்த பிறகும் அதன் வண்ணங்கள் விரல்களில் ஒட்டிக் கொள்வதைப் போலக் கதையின் நிகழ்வுகள் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன . முதலில் நிலை என்னும் கதையை தனக்குப் பிடித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக சுஜாதா அறிமுகப்படுத்தியதிலிருந்துதான் வண்ணதாசன் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது . பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் அவரது ஒரு சிறுகதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது . கதைகள் எதுவும் இப்போது நினைவில்லை . ஆனால் வண்ணதாசன் மீதான பிரமிப்பு இன்றுவரை அப்படியே இருக்கிறது . அதில் ஒரு கதை , ( நினைவிலிருந்து எழுதுகிறேன் ) பெயர் நினைவில்லை , அதில் டிஃபன் பாக்ஃஸூக்குள் சாப்பாட்டுக்குப் பிறகு தனது கடிகாரத்தை கழட்டிவைக்கும் பழக்கம் கொண்ட ஒரு பெண் ஒரு நாள் அதை மறந்து அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வந்து