Posts

Showing posts from October, 2010

கல்வி கடிதங்கள்

Image
Hi Jagadeesh எனது இரண்டாவது மகனை பள்ளியில் சேர்த்து விட்டு அங்குள்ள அடிப்படை வசதி இன்மை மற்றும் கல்வி கற்பிக்கும் முறையில் எனக்கு உடன்பாடிலாததால் பள்ளியோடு ஒரு பெரும் போராட்டத்தை தனியாக அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது குறித்து ஏற்கனவே சில  பதிவுகளும்  போட்டிருக்கிறேன்.  பதிவுகளை படித்து எனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் தளத்தில் கொஞ்சம் இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது விருட்சத்தில் பின்னூட்டம் இடுமாறு  கேட்டுக் கொள்கிறேன.் நியாயம் இல்லை என்று நினைத்தால் விருட்சத்தில்  அதன்  காரணங்களை பின்னூட்டம் இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உங்கள் கருத்துக்கள் பெரிய உதவியாக இருக்கும்.  இது ஒரு தாயின் போராட்டம். பள்ளியில் வேறு எந்த பெற்றோரும் இது வரை பெரிதாக இதில் இறங்காத நிலையில்  இது ஒரு தனி மனித போராட்டம்.  Dept of Edu அதிகாரிகளிடம் புகார் அளிககு முன் பலரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.  நன்றி. விருட்சம் Hi Jagadeesh Happy Diwali. Its long time since I communicated to you.  My younger son is attending LKG and he is 3+. The school forces h

கிம் கி டுக் தரும் ஜென் அனுபவம்

Image
தென் கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் spring, summer,fall,winter ….and spring படம் முற்றிலும் புதிய காண்பனுபவத்தை வழங்கிய ஒரு திரைப்படம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அவற்றின் நடுவே உள்ள ஏரி ஒன்றில் மிதந்தபடி நிற்கிற ஓர் பௌத்த ஆசிரமத்தில் பிறந்து வளரும் ஓர் இளம் துறவியும் அவனை வளர்க்கும் குருவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். குழந்தைப் பருவத்திலேயே அந்த இளம் துறவிக்குள் முகிழ்த்து வளரும் அகங்காரம், தன்னையே முன்னிலைப் படுத்தி, தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அவன் செய்யும் செயல்கள் மூலம் அறியப்படுகிறது. ஏரியில் உலவும் தவளை, பாம்பு, மீன் போன்ற சின்ன உயிர்களின் உடலில் கயிற்றைக் கட்டி அவற்றை நீரில் விடுகிறான். அவை துடிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான்.(சிறுவனாயிருக்கும் போதுதான்). குரு இவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரவில் உறங்கும் போது அவன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டி விடுகிறார். காலையில் கல்லை அவிழ்க்கச் சொல்லிக் கேட்கும் அவனிடம், நீ போய் அந்த உயிரினங்களை விடுவித்து விட்டு வா. அதுவரை நீ கல்லைச் சுமந்து கொண்டுதானிருக்க வேண்டும். அவற்

எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம்

Image
நாவல் :          உப பாண்டவம் ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு : விஜயா பதிப்பகம் பக்கங்கள் :  384 விலை :      200 பரிந்துரை : ஜெகதீஷ் குமார்         உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)         இந்திய