Posts

Showing posts from September, 2022

கல்லளை - சிறுகதை - சொல்வனம் இதழில்

Image
என் புதிய சிறுகதை கல்லளை சொல்வனம் 279 வது இதழில் வெளிவந்துள்ளது. ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி. கல்லளை "என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. மேலும் வாசிக்க

பிறப்பொக்கும், கர்மா விமர்சனம்

  நண்பர் ஜமீலா எனது பிறப்பொக்கும், கர்மா ஆகிய சிறுகதைகளை வாசித்து விட்டு வாசிப்பனுபவமும் விமர்சனமும் எழுதியிருந்தார்.  அவரது விமர்சனம் கீழே பி றப்பொக்கும் கதை பற்றி என் கருத்து ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக சோமுவும், பாலுவும் இருந்தாலும் செயலில் வேறுபட்டே நிற்கின்றனர்.  சோமு உடல் ஊனமுற்றவனாக இருந்தாலும்  லாட்டரி தொழில் செய்து குடும்பத்தைக் காக்கின்றான். பாலு பொய், புரட்டு, திருட்டு என எதற்கும் அஞ்சாதவனாய் திடீர் திடீரென காணாமல்  போகின்றவனாய் இருக்கின்றான். துணைக்கு செந்திலோடு விந்தி விந்தி நடந்து குடும்பத்தைக் காக்கும் சோமுவை வெளியில் கல்யாணி, லாட்டரிகடைக்கரர், அலியார், லல்லி அப்பா என எல்லோரும் மதிக்கின்றனர். பாலுவை யாரும் சட்டை செய்வதில்லை. ஆனால் இதற்கு மாறாக பாலுமேல்  அபரிமிதமான பாசம் வைத்திருக்கிறாள் அவன் அம்மா. சோமு மேல் பாசம் காட்டுவது குறைவுதான். சோமு வீட்டில் செலவழிக்கும் நேரம் குறைவு. ஆனால் பாலு இடையிடையே வீட்டிற்கு வந்தாலும் அம்மாவுடன் நேரம் செலவழித்து மனதைக் கரைப்பதில் கை தேர்ந்தவனாக இருக்கிறான். அவன் தாய் அவன் குறைகளை பெரிதாக மதிக்கவில்லை. மாறாக அவன் பக்கமே பேசுகிறாள். தன்ன

கர்மா சிறுகதை சொல்வனம் இதழில்

Image
  என் சிறுகதை கர்மா சொல்வனம் இதழின் 277வது பதிப்பில் வெளிவந்துள்ளது. ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி. தன் புல்வெட்டியில் ஏதோ தவறு இருந்தமாதிரிப் பட்டது பீட்டருக்கு. ஐந்தடிக்கு ஒருமுறை திக்கித் திணறிக் கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்தி விட்டு, தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார். வெட்டுப்பட்டிருந்த புற்கள் ஒட்டியிருந்தது தவிர வேறெதுவும் பழுதாகத் தெரியவில்லை. அப்புற்களின்றும் வெளிவரும் பச்சை மணத்துக்காகவே பீட்டர் புல்வெட்டுவதென்றால் உற்சாகமாகத் தயாராகி விடுவார். எந்திரத்தில் கேசோலினும் அளவுக்கதிகமாகவே இருந்தது. மூன்று முறை நிறுத்தி, நிறுத்திப் பரிசோதித்து விட்டார். அவரால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சலித்துப் போய், இயந்திரத்தைக் கொண்டு போய் கராஜில் நிறுத்தினார். மேலும் வாசிக்க…