Posts

Showing posts from 2009

புருஷார்த்தம்

Image
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் தேவைப்படும் விஷயம் மனநிறைவு. அம்மனநிறைவை நாடித்தான் அவன் பல்வேறு முயற்சிகளை தன் வாழ்வில் தொடர்ந்து மேற்கொள்கிறான். அம்முயற்சிகள் மூலம் அவன் அடையும் பொருட்கள் அவனுக்கு முழுமையான் மனநிறைவைத் தரும் என்று நம்புகிறான். ஆனால் அவனது அனுபவமோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நான்கு விஷயங்களை அடைவதற்கு முயல்கிறான். அவை, அறம், பொருள், இன்பம், வீடு. இவற்றில் பொருள் என்பது நம் வாழ்விற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைக் குறிக்கிறது. அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைந்தவுடன் அவன் இன்பத்தை நாடுகிற முயற்சியில் ஈடுபடுகிறான். தான் அடைந்த பொருள் மற்றும் இன்பத்தை அனுபவிப்பதற்கான புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒருவனால் அவற்றை அனுபவிக்க முடியும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இல்லையெனில் அவை இருந்தும் அவற்றை அனுபவிப்பதற்கான உடல்,மனம் மற்றும் சூழ்நிலைகள் அவனுக்கு வாய்க்காது. புண்ணியத்தை அடைய வேண்டுமெனில் ஒருவன் தன் வாழ்வினை தர்மப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. தர்ம வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகளை வேதத்தின் முதல் பகுதி கூறுகிறது. இ