Posts

Showing posts from May, 2010

ஹர்ட் லாக்கர் - கொடிய கரங்கள் நெறிக்கும் குரல்வளைகள்

Image
விபத்துகளும் , தீவிரவாதமும் , வன்முறையும் அத்துமீறலும் தொலைக்காட்சியின் அன்றாடச் செய்திகளாகி நம்முடனேயே பயணித்துக் கொண்டிருப்பதால் அவற்றின் உண்மையான தாக்கம் பெரும்பாலான நேரங்களில் நம்முள் நிகழ்வதில்லை . சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் , புகைமண்டலத்துக்கிடையில் ஒலிக்கும் அலறல்களையும் பாராமல் , கேளாமல் எந்தச் சலனமுமின்றி சானல் மாற்றி கிரிக்கெட்டுக்கோ , நெடுந்தொடருக்கோ தாவி விடுகிறோம் . மங்களூரு விமான நிலையத்தில் விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து எரிந்துபோன செய்தியைக் கேட்டவுடன் திடுக்கென்றிருந்தது . வருடாவருடம் நானும் , என் மனைவியும் பங்களூரு புதிய விமானநிலையம் சென்று இறங்கி அங்கிருந்து ஈரோடு பயணிப்போம் . விமான நிலையத்தில் சாப்பிட்ட வடையும் , பொங்கலும் , சாண்ட்விச்சும் இன்னும் ஞாபகம் இருக்கிறது . துபாயிலிருந்து பணி முடித்துத் திரும்பியவர்களும் , அவர்கள் குழந்தைகளும் , மனைவியரும் , அவர்களை ஏந்திவந்த விமானிகளும் , பணியாளர்களும் கணநேரத்தில் பொசுங்கிப் போய்விட்டதை நினைத்து நெஞ்சு கனக்கிறது . உயிரிழந்த அனைவருக்க