Posts

Showing posts from August, 2010

நல்ல சிவம் -(2) சிறுகதை

Image
நல்ல சிவம் -(2) சிறுகதை நல்ல சிவத்தின் பரந்த உடம்பையும், கரகரத்த குரலையும், புறங்கையில் தேன் நிறத்தில் படர்ந்திருக்கிற பூனை ரோமத்தையும் முதலில் காண்பவர்கள் அவன் அருகாமையில் இருப்பதற்குச் சற்று யோசிப்பார்கள். அப்படியும் மீறி அவனோடு பழக முயற்சித்தவர்களில் பலபேருக்கு கசப்பான அனுபவமே ஏற்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று நாள் ஒன்றாக சுற்றித் திரிவார்கள். அப்புறம் திடீரென்று மதியச் சாப்பாட்டு இடைவேளையில் பள்ளி மைதானத்தில் அவனோடு கட்டிப் புரண்டு உருண்டு கொண்டிருப்பார்கள். நல்ல சிவம், மாதேஸ், நான் மூவரும்தான் ஆறாவதிலிருந்தே நண்பர்கள். அதற்காக கட்டிப் புரண்டு சண்டை போட்டதில்லை என்று பொருளல்ல. என்னதான் முரடனென்றாலும் நல்ல சிவம் மனசு அவன் வீட்டிலிருந்து கொண்டு வருகிற எருமைத் தயிர் மாதிரி அத்தனை வெள்ளை.  எங்கள் பள்ளிக்கூடத்தின் பின் சுவரில் ஒரு ஆள் குனிந்து நுழையுமளவுக்கு ஒரு ஓட்டை உண்டு. ஆசிரியர்கள் விடுமுறையிலிருக்கும் நாட்களில் வகுப்பிலிருந்து நழுவி அந்த ஓட்டை வழியே நல்லசிவம் எங்களை வழி நடத்திச் செல்வான். அந்த ஓட்டை ஏற்படுத்தியதில் நல்லசிவத்துக்குப் பெரும்பங்கு உண்டு என்று பள்ளியில் ஒரு

ரோபோக்களின் இதயமும், கணினிக் கனவுகளும் 2

Image
 நாங்கள் அமர்ந்திருந்த கருத்தரங்கில் உள்ள அனைவரின் (சுமார் 200 பேர் இருந்தோம்) பிம்பத் தகவல்களையும் சேமிப்பதற்கு குறைந்தது ஒரு ஜிகா பைட்(Gb) செலவாகும் என்றார். அதையே இப்போதிருக்கிற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 30 கிலோ பைட்டுக்குள் (Kb) அடக்கி விட முடியும் என்றார். இந்த பிம்பத் தகவல் சேமிப்பு என்பது கணினித் துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. சேர்ந்து கொண்டே இருக்கிற தகவல்களை என்ன செய்வது? ஒரு மனிதனின் வாழ்நாள் முழுதும் சேகரிக்கப்படும் தகவல்கள் கிட்டத்தட்ட இருபது டெர்ரா பைட்டுகள் (Tb) அளவுக்கு வருமாம். இது ஒரு பெரிய சுமை. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உகைலும் அவரது குழுவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர். அவர் சொன்ன சம பரப்பு கொண்ட உலோகங்களுக்கிடையே வெப்பங்கடத்தப்படுதல், பார்ஷியல் டிஃப்ரென்ஷியல் ஈகுவேஷன் என்பதெல்லாம் சுத்தமாகப் புரியவில்லையென்றாலும், சொல்ல வந்த கருத்தை சுமாராகப் புரிந்து கொண்டேனென்றே நினைக்கிறேன். ஒரு பொருளின், உயிரினத்தின் பிம்பத் தகவலைக்கொண்டுதான் அவற்றின் கணினிப் பிம்பங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்தத் தகவல

வாசகர் அனுபவம் - நீங்களும் பங்களிக்கலாமே!

Image
பாஸ்கர், ராஜா,  சம்முவம் .  மூவரும் வாசகர் அனுபவம் என்ற தளத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் அற்புதமான சேவையைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் என்னையும் அதில் இணைத்துக் கொண்டது எனக்குப் பெருமை. அதோடு அவர்கள் நட்பும் கிடைத்தது நெகிழ்வு. நானும் சில நூல்களை அதில் பரிந்துரைத்திருக்கிறேன். வாசிப்பு ஆர்வம் கொண்ட அனைவரையும் வாசகர் அனுபவம் வரவேற்கிறது. தாங்கள் வாசித்த நூல்களை அதில் நீங்கள் பரிந்துரைக்கலாம். தங்கள் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் சரி. நல்ல புத்தகங்கள் பரவலான வாககரிடத்துச் சென்றடைய வேண்டும் என்பதே இத்தளத்தின் குறிக்கோள். தள முகவரி http://baski-reviews.blogspot.com/ தொடர்பு மின்னஞ்சல் kbaski@gmail.com நண்பர்களின் கடிதங்கள் அன்புள்ள பாஸ்கர் , ராஜா , கரிகாலன் புத்தக பரிந்துரை தவிர்த்து வேறு விஷயங்களையும் என் தளத்தில் எழுத முயன்று வருகிறேன் . நேரங்கிடைக்கும்போது நீங்கள் வாசித்துக் கருத்துரைத்தால் மகிழ்வேன் . அன்புடன் ஜெகதீஷ் குமார். அன்புள்ள ஜெகதீஷ் , உங்கள் தளத்தில் ஜாக்கி வாசுதேவ் ஆசிரம அனுபவங்களைப் படித்தேன் , ரசித்தேன் . தமிழ் உங்களுக்கு லா