Posts

Showing posts from July, 2014

நாவல்கள் - ஜெயமோகன் கடிதம்

Image
அன்புள்ள ஜெ. என் மின்னஞ்சல் ஸ்பாமுக்குள் சென்று விட்டது பற்றிய உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. நன்றி. விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்ததிலிருந்து உங்களுக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. ஆனால் தினமும் உங்கள் தளத்தில் மேய்வது மட்டும் நிற்கவில்லை. பொதுவாகவே இணையப் பயன்பாட்டைக் குறைத்து புத்தகங்கள் வாசிப்பதை அதிகரித்து விட்டதால் உங்கள் தளத்தில் கூட நிறைய வாசிக்க முடிவதில்லை. ஆனால் உண்மை சுடரும் கட்டுரைகள் முதற்சில வரிகளிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன. வாழைப்பழ தேசம், மதுவிலக்கு பற்றிய கட்டுரைகள் போன்று. சிறுகதைகளில் காந்தி பற்றிய சிறுகதையை வாசித்தேன்.  சென்ற மாதங்களில் உங்கள் நாவல்கள் சிலவற்றை வாசித்து முடித்தேன். பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், காடு (கால்வாசி) பின் தொடரும் நிழலின் குரல் கொடுத்த அனுபவம் அலாதியானது. உங்கள் நாவல்களிலேயே நான் முதலில் வாசிக்க விரும்பியது பின் தொடரும் நிழலின் குரலைத்தான். ஆனால் விஷ்ணு புரம், இரவு, கிளி சொன்ன கதைக்குப் பிறகே இந்நாவலுக்கு வந்தேன். ஆனால் இந்த நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, என்ன அனுபவத்தைத்