Posts

Showing posts from August, 2011

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

Image
உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு என் உளம் கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

எஸ்.சம்பத்தின் இடைவெளி -சாவு நிகழ்த்தும் உரையாடல்

Image
நாவல் : இடைவெளி ஆசிரியர் : எஸ். சம்பத் முதற்பதிப்பு : 1984 பக்கங்கள் : 108        எஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அனுப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.        முன்னுரையில் சம்பத்தே குறிப்பிடுவதைப் போல, இடைவெளி சாவு என்கிற விஷயத்தைக் குறித்து ஆராய்கிறது. தோல் தொழிற்சாலையில் கணக்கெழுதும் வேலை பார்க்கும் தினகரனை, சாவு பற்றிய சிந்தனையே சதா ஆக்ரமித்துக் கொள்கிறது. சாவு என்பது எவ்வாறு நிகழ்கிறது? எல்லாச் சாவுகளுக்கும் பொதுப்படையான தன்மை ஏதேனும் உண்டா? சாவை நாம் தெளிவாக அறிந்து கொள்ளும்படி வார்த்தைகளால் விளக்

நான்கு கேள்விகள்

Image
 சாதன சதுஷ்டய சம்பத்திகளை அடைந்த பின்னர் ஞானயோகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஞானயோகம் என்பது விசார ரூபமாக இருக்கிறது. சாதன சதுஷ்டய பண்புகள் பக்க விளைவுகளாக மன அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அத்தோடு திருப்தி அடைந்து விடாமல் மேற்கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைய முடியும். ஆன்ம விடுதலை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அடையப்படுகிறது. ஞானத்தை அடைவதற்கான ஒரே சாதனம் விசாரம் மட்டுமே. எப்படி ஒரு பொருளின் இருப்பு ஒளியின் துணையின்றி நமக்கு விளங்குவதில்லையோ அதேபோல் விசாரம் தவிர்த்த பிற சாதனைகள் மூலம் ஞானம் உற்பத்தி ஆகாது. மேற்குறிப்பிட்ட பண்புகள் அனைத்தும் கர்மங்களின் மூலமே அடையப்படும். கர்மத்தின் மூலம் அடையப்படும் எதுவும் காரக வியாபாரம் எனப்படும். கர்மயோகம், தியானம் முதலியன இதில் அடங்கும். ஆனால் விசாரமானது பிரமாண வியாபாரம் எனப்படுகிறது. அறிவைக் கொடுக்கும் கருவியான பிரமாணத்தைப் பயன்படுத்தி விசாரம் செய்வதின் மூலம் ஞானத்தை அடைகிறோம். ஆத்ம ஞானத்துக்கான ஒரே கருவி உபநிஷத் அல்லது வேதாந்தம் ஆகும். மேலும் உபநிஷத் என்பது ஒரு ஷப்தப் பிரமாணம். உபநிஷத்தின் உட்பொருள்

ஜேசுதாசின் சங்கீத மழை

Image
       இரவு உணவுக்கு அமர்கையில் நிகழும் வழக்கமாகவே அன்றும் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு நேரடியாக நியோ கிரிக்கெட்டுக்குத் தாவினேன். மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ராகுல் திராவிட் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி முடித்தவுடன் விளம்பரம் போட்டு விட்டதால் சானல் மாற்ற வேண்டியதாகி விட்டது. சானல்களில் தவ்வித் தவ்வி ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த போது, ஓர் ஆணும்,  பெண்ணும் மேடையொன்றில் ஆளுக்கொரு மூலையில் நின்றபடி முக்கி, முக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். கூல் கோடை என்ற கோடை விடுமுறைக்கான திறந்தவெளி நிகழ்ச்சி அது. தொலைக்காட்சி ம்யூட்டில் இருந்ததால் என்ன பாடலென்று தெரியவில்லை. காமெரா பார்வையாளர் பக்கம் திரும்பிய போதுதான் மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. குடை பிடித்தபடி சிலர் அடக்கமாய் நின்றிருக்க, நூற்றுக்கணக்கான இசைப்பிரியர்கள் தெப்பலாய் நனைந்தபடி சன்னதம் வந்ததைப் போல் ஆடிக்கொண்டிருந்தனர். என்ன பாடலாயிருக்கும் என்று ஒலியைக் கூட்டிப் பார்த்தேன். ‘ கரிகாலன் காலைப் போல . . .’ என்று துருப்பிடித்த பிளேடு தொண்டையில் சிக்கிக் கொண்ட அவஸ்தையில் பாடிக்கொண்டிருந

ஓரான் பாமுக்கின் வெள்ளைக் கோட்டை

Image
என் பெயர் சிவப்பு என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் முதல் நாவல் வெள்ளைக் கோட்டை (The White castle). நாவல்கள் பிரிவில் ஜான் கிருஷாம்களும், சிட்னி ஷெல்டன்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் எங்கள் பள்ளி நூலகத்தில் ஓரான் பாமுக்கைப் பார்த்ததும், ஹித்ததூ கடைகளில் பாகற்காயைப் பார்த்தது என் மனைவிக்குக் கண்கள் விரிவதைப் போல் என் கண்களும் விரிந்தன. ஒன்று அல்ல, அவர் எழுதிய மூன்று புத்தகங்கள் இருந்தன. The New Life என்ற நாவலும், தன் சொந்த ஊர் அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய புத்தகமான இஸ்தான்புல்லும். வெள்ளைக் கோட்டை அவரது முதல் நாவல் என்பதாலும், கொஞ்சம் சின்ன புத்தகமாக இருந்ததாலும் (145 ப) அதையே முதலில் தேர்வு செய்தேன்.        துருக்கிப் படைகளிடம் மாட்டிக் கொள்கிற வெனிஸ் நகர அறிஞன் ஒருவன் சுல்தான் முன்னிலையில் கைதியாகக் கொண்டு வரப்படுகிறான். பிற போர்க்கைதிகள் கடினமான உடலுழைப்புத் தொழில்களைப் புரியப் பணிக்கப்பட்டபோதிலும், இவனது பல்துறை அறிவின் காரணமாக அந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். அறிவியலிலும், புதிய விஷயங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட ஹோஜா என்பவ

தேசிய புத்தக நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1 அக்னி நதி உருது. கு அதுல் ஐன் ஹைதர் .தமிழாக்கம் சௌரி 2 அரை நாழிகை நேரம். மலையாளம் .பாறப்புறத்து தமிழாக்கம். பெ நாராயணன் 3 அவன் காட்டை வென்றான் தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி .தமிழாக்கம் எதிராஜுலு 4 இதுதான் நம் வாழ்க்கை .பஞ்சாபி . தலீப் கௌர் டிவானா .தமிழாக்கம் தி சா ராஜு 5 இயந்திரம் மலையாளம் .மலையாற்றூர் ராமகிருஷ்ணன் .தமிழாக்கம் கெகெபிநாயர் 6 இலட்சிய இந்து ஓட்டல் . வங்காளி. பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் த ந சேனாபதி 7 உம்மாச்சு . மலையாளம் உரூப் தமிழாக்கம் இளம்பாரதி 8 உயிரற்ற நிலா . ஒரியா . ஆர் உபேந்திர கிஷோர் தாஸ் தமிழாக்கம் பானுபந்த் 9 ஏணிப்படிகள் . மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சி ஏ பாலன் 10 ஒரு குடும்பம் சிதைகிறது கன்னடம் எச் எல் பைரப்பா தமிழாக்கம் எச்.வி.சுப்ரமணியம் 11 கங்கவ்வா கங்காமாதா .கன்னடம். சங்கர் மொகாசி புனேகர் தமிழாக்கம் எம் வி வெங்கட் ராம் 12 கங்கைத்தாய் . இந்தி . பைரவப் பிரசாத் குப்தா தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத் 13 கங்கைப்பருந்தின் சிறகுகள் . அசாமி . லக்ஷ்மீ நந்தன் போரா . தமிழாக்கம் துளசி ஜெயராம

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி 2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு நாயிடு 3 பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி 3 செம்மீன் [செம்மீன்] மலையாளம் தகழிசிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சுந்தர ராமசாமி 4 சேரி [மாலப்பள்ளி ] தெலுங்கு உன்னாவால் லட்சுமிநாராயணா தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா 5 எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது [ ன்றுப்பாப்பாக்கு ஒரானெயுண்டார்ந்நு ]மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் கெ.சி சங்கரநாராயணன் 6 இரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை 7 காட்டின் உரிமை [ஆரண்யார் அதிகார் ] வங்காளி மகாஸ்வேதா தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி 8 காலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா 9 காணி நிலம் [சமான் அதா குந்தா] ஒரியா . ,பக்கீர் மோஹன் சேனாபதி தமிழாக்கம் எச்.துரைசாம

விடுதலையின் இச்சை

Image
ஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது.  இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது. நமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம்.