Posts

Showing posts from November, 2022

கல்லளை - சிறுகதை

Image
கல்லளை சிறுகதை நன்றி: சொல்வனம் - செப்டம்பர் 25, 2022 1 “என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. கங்காமூலாவெங்கும் மலைக்காடுகளில் பரவி வாழ்ந்த ஒவ்வொரு மலைச்சாதிக் குடியானவனுக்கும், குடியானத்திக்கும் கடந்த ஆறுமாதங்களாக இதே கேள்விதான். இதே கவலைதான்.  ஐந்துகுடிப் பெரியவர்களும் குலமுன்னோர் வழிபாட்டு நினைவிடமான ஹிரயிரிக்குச் சென்று தொழுது வணங்கிவிட்டு, அருகிலிருந்த தோதகத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இருட்டு சாரைப்பாம்புக் கூட்டத்தைப் போல சரசரவென்று எங்கும் பரவிக் கொண்டிருந்தது. விரைந்து இறங்கும் கடுங்குளிரை விரட்ட எதிரில் சவுக்குக்கட்டைகளைக் கும்பாரமாகக் குவித்து நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. குடிக்கு எட்டுப் பேராக நாற்பது பேர் பெரியவர்கள் முன்ன

கர்மா - சிறுகதை

Image
கர்மா சிறுகதை நன்றி: சொல்வனம் - ஆகஸ்ட் 28, 2022 தன் புல்வெட்டியில் ஏதோ தவறு இருந்தமாதிரிப் பட்டது பீட்டருக்கு. ஐந்தடிக்கு ஒருமுறை திக்கித் திணறிக் கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்தி விட்டு, தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார். வெட்டுப்பட்டிருந்த புற்கள் ஒட்டியிருந்தது தவிர வேறெதுவும் பழுதாகத் தெரியவில்லை. அப்புற்களின்றும் வெளிவரும் பச்சை மணத்துக்காகவே பீட்டர் புல்வெட்டுவதென்றால் உற்சாகமாகத் தயாராகி விடுவார். எந்திரத்தில் கேசோலினும் அளவுக்கதிகமாகவே இருந்தது. மூன்று முறை நிறுத்தி, நிறுத்திப் பரிசோதித்து விட்டார். அவரால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சலித்துப் போய், இயந்திரத்தைக் கொண்டு போய் கராஜில் நிறுத்தினார். உடனே வீட்டுக்குள் போகவிரும்பவில்லை. வீட்டின் முன்னாள் உரிமையாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர் உள்ளே போனால் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருக்கும். பீட்டருக்கு தனது ஆங்கிலப் புலமை மீது பெருமிதம் இருந்தாலும், அமெரிக்கர்களுடன் பேச முற்படுகையில் மட்டும் அத்திறமை அவரைப் பரிதாபமாகக் கைவிட்டு விடுகிறது. சிறிது நேரம் தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் நேரம்

ஊனுடல் - சிறுகதை

Image
  நன்றி: சொல்வனம் - ஜூலை 24, 2022 ஊனுடல் சிறுகதை கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த  தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை மீது விழ,  ஒரு கணம் கண்ணிமைக்காமல் அதையே பார்த்து நின்றான் சங்கமேஸ்வரன். கிரில் செய்யப்பட்ட லோப்ஸ்டர், சோறும் கருதியாவும், வறுத்த டூனா துண்டங்கள், ரொட்டியும் மசூனியும், டெவில் செய்யப்பட்ட கோழிக்கறி, தொட்டுக் கொள்ள ரிஹாக்குரு, அப்பளம். குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மதுவகையின் பெயர் ப்ளாக்பெர்ரி சங்கிரியா என்று நினைவு வந்தபோது சங்கமேஸ்வரனுக்குத் தன்மேலேயே வியப்பாக இருந்தது. வந்து ஒரு வாரத்தில் நிறையத்தான் கற்றிருக்கிறோம். அது சரி, ஒரு மனிதனால் இத்தனையும் ஒருவேளையில் உண்டு முடித்து விட முடியுமா என்று அவன் சிந்திக்க முற்படுகையில் மேஜையின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதர் அவனை அழைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தார். “ஹே, பாய், பிரிங் மி எ ஹைனிக்கன்!” “யெஸ் சார்,” என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று பாரை நோக்கிச் சென்றான். காக்டெயில் ஏதேனும் கலப்பதென்றால்தான் மேலாளர் விஜயசிங்கேயின் உதவி தேவை. பிய