Posts

Showing posts from January, 2013

டாடி எனக்கு ஒரு டவுட்டு!

ஆரம்பத்தில் சுவாரசியமின்றி பார்க்க ஆரம்பித்து இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஆதித்யா சானலில் எப்போது ஒளி பரப்பினாலும் வாயைத் திறந்து கொண்டு ஒரு மெல்லிய இளிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.      அப்பா பள்ளி செல்லும் தன் மகனுக்கு உலக விஷயங்களில் ஏதாவதொன்றை விளக்க முயற்சிக்கிறார். பையன் அவரது விளக்கத்திலிருந்து குதர்க்கமாக,சமயங்களில் புத்திசாலித்தனமாகவும் ஏதாவது குறையைக் கண்டுபிடித்து ‘டாடி,எனக்கு ஒரு டவுட் ’ என்று கிறீச்சிட்டபடி அதை விளக்குமாறு கேட்கிறான். அப்பா அவனுக்குப் பதில் சொல்வதறியாது விழிக்கிறார். பையன் அவரைப் பிடித்துக் கொண்டு ‘ சொல்லுங்கள் டாடி,சொல்லுங்கள்,சொல்லுங்கள் டாடி,சொல்லுங்கள், ’ என்று அவரைப் பிடித்துக் கொண்டு நச்சரிக்கிறான்.      அப்பாவாக நடிப்பவரை விட என்னைக் கவர்ந்தவர் பையனாக நடிப்பவர்தான். அவரது கீச்சுக்குரல் முதலில் செயற்கையானதாகத் தெரிந்தாலும், பழகப் பழக ஒரு சிறுவனின் குரலாகவே அதை அடையாளம் காண முடிந்தது. அவரது உடல் மொழியும் அமர்க்களம். சிறுவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு காட்சித் துண்டாக இது திகழும் என்றே நான் நினைக்கிறேன். அடுத்த முறை என் தங்கை மகன்க

கிளிஞ்சல்களும், நத்தைக் கூடுகளும்

நத்தைக் கூடுகளைப் பற்றிய வியாக்கியானம் இந்தக் கட்டுரைகளை நான் எனது வலைப்பூவான பெருங்கனவைத் துவங்கிய புதிதில் எழுதினேன் . எழுத வேண்டும் என்ற ஆர்வம் பின்புறம் கிழிந்த ட்ரவுசர் போட்டிருந்த காலத்திலிருந்தே அரித்துக் கொண்டிருந்த ஒன்று . மேலும் பெருங்கனவைத் துவக்கிய காலகட்டத்தில் நான் ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவனாயிருந்தேன் . ஆன்மிக வளர்ச்சிக்கு இந்த வலைப்பூ உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் துவங்கி , பிறகு இதை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்று திகைத்து நின்ற போது , பிரபல பதிவர்கள் என்ன மாதிரி தங்கள் வலைப்பூக்களில் எழுதுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன் . அதே போன்ற கட்டுரைகளை நானும் எழுதினேன் . இந்தத் தொகுப்பில் உள்ள இருபத்தேழு கட்டுரைகளில் பெரும்பாலானவை திரைப்படம் குறித்து இருப்பதற்குக் காரணமும் அதுவே . எப்போதுமே எனது பிரதானமான ஆர்வங்கள் இரண்டு . ஆன்மிகமும் , இலக்கியமும் . இரண்டு துறைகளிலுமே தவறான வழிகாட்டுதல்களின் மூலம் நாம் வழி தப்பி விடுவதற்கானச் சாத்தியங்கள் உண்டு . எழுதுவது என்பது பெரும்பா

இறைச்சி சுகம்

Image
மானின் இறைச்சி மிகுந்த சுவையுடையது. மான் தோல் விலைமதிப்பற்றது. அதன் மருண்ட பார்வையோ வசீகரம் இரை மேயும் கணத்திலும் பசித்த புலிதான் அதன் அச்சம் குறி வைக்கப்பட்ட வேடனின் அம்பு புறங்கழுத்தில் மயிற்கூச்செரிய வைக்கும். காவலன் கைகளில் அகப்பட்ட மான் துன்புறும் கணங்களைக் கண்ணீரில் சொல்லும். கானகத்தின் காற்றையுண்டு தடாகத்து நீர் பருகி காட்டுப் புற்கள் மென்றபடி சாவதானமாய் நடக்கும் வாழ்க்கை இனி இல்லை. மினுக்கும் தோலும் அப்பாவிக் கண்களும் தளிர் நடையுந்தான் உன் எதிரிகள். காட்டின் தவிர்க்கவியலா அங்கமல்ல இனி நீ. இறைச்சி சுகம் இயற்கை நியதிகளை வென்றுவிடும் இனி. 24/01/13