Posts

Showing posts from November, 2010

அன்பு நண்பர்களுக்கு

Image
அன்பு நண்பர்களுக்கு, வரும் நவம்பர் பத்தாம் தேதி இந்தியா வருகிறேன். இலக்கிய நண்பர்கள் யாரையும் சந்திப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஊரில் எனக்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவன் யுவராஜ் எனக்கு சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து உதவியவன். இன்னொருவர் கே.சி. முருகன். தனிப்பயிற்சிக் கல்லூரி வைத்திருக்கிறார். அப்துல் கலாம், கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, இந்த மாதிரிதான் அவரது வாசிப்புப் பழக்கம். ஊருக்குப் போனால் இருவரும் தத்துவம், இலக்கியம், கல்வி என்று மணிக்கணக்கில் பேசுவோம். என் திறமை  மீது அபார நம்பிக்கை அவருக்கு. நான் அங்கு சென்றால் என்னை வைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு ஒன்று எடுத்து விடுவார். நானும் நிறைய புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு போய் வகுப்பெடுப்பேன் . இடையிடையே எனக்குத் தெரிந்த, நான் அரைகுறையாகப் பயிற்சி செய்கிற எளிய யோகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சத்தைப் பார்க்க பரவசமாக இருக்கும். இந்த ஆண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லலாமா என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் சென்னையின் மக்கள் நெருக்கத்தை ந

அருகாமை

Image
நான் அறியவில்லை உன் அருகாமையின் அருமை. திடீரென்று மலட்டு நிலமாகி விட்டது என் மனம். ஜன்னலூடே தலை நீட்டுகிற  பூச்செடியை புறக்கணித்து விட்டு கணினித் திரையின்  ரோஜாவை  ரசிக்கும்   மனிதமந்தையில் ஒருவனானேன். நீ என் மீது வீசிய புன்னகைகள் சேகரித்தேன். சேகரித்த பெட்டி இன்று சேற்றுக்குள். குப்பைத்தொட்டியைக் கிளறிக் கிளறி அந்தப் பொக்கிஷப் புன்னகைகளைப் பொறுக்கி விடப் பார்க்கிறேன். நான் அறியவில்லை உன் அருகாமையின் அருமை. என் செல்ல தேவதையின் சிறகுகளை போர்வையாக்கி உறங்கினேன். அவள் இமைகளுக்குள் பூக்கும் கனவுகளைத் திருடிக் கொண்டேன். பூ தாங்கும் காம்புக்கு என் காதலைப் பொழிய வேண்டுமென்று புரியாமல் போனேன். அவள் என் உதிரத்தில் கலந்தாலும் இதயத்துடிப்பின் அடிநாதம் அவளே ஆனாலும் என் சுவாசத்திலும் குறட்டையிலும் உட்புகுந்து வெளிச் செல்லும் உயிர் அவளே ஆனாலும் குருதியோட்டம் அவள் பக்கம் பாயவில்லை. துடிப்பின் ஒலி அவளறியாமலேயே போனது. என் சுவாசம் வேறு திசையில் பயணித்ததை நான் அறியவில்லை. என்ன ஆயிற்று எனக்கு? ஏனிப்படி மரத்து விட்டதென் மனம்? காய்ந்து போன  என் நந்தவனம் இனி ஒரு தீக்குச