Posts

Showing posts from June, 2010

ராவணன் - ஆதாரமாய் சில சந்தேகங்கள்:

Image
ராமாயணக் கதையை மணிரத்னம் எடுத்து சொதப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டை நிறுத்திவைத்து விட்டு, உருப்படியாகப் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்கலாம். மணிரத்னத்துக்கென்று ஒரு உலகம் இருக்கிறதாம். ஹாசினி பேசும் படம் விமர்சனத்தில் யூகிசேது சொன்னார். அந்த உலகில் வரும் பாத்திரங்கள் அவரது விருப்பத்திற்கேற்பவே இயங்கமுடியும். அதை நிரூபிப்பது போலவே ராவணனில் வரும் பாத்திரங்கள் இயல்புக்கு மாறுபட்டு நடந்துகொள்ளுகின்றன. தங்கை சாவுக்குக் காரணமானவனின் மனைவியைக் கடத்தி வந்து அவள் சாவுக்கு அஞ்சாதவள் என்று தெரிந்ததும் அவள் மீது காதல் பிறந்து விடுகிறது வீராவுக்கு. அவளும் அவனைப் பார்த்துக் கிறங்கி நிற்பது மாதிரிதான் தெரிகிறது.         நகரப் பின்னணியில், அரிவாள் கலாசாரத்திலும் வேர்கொண்டு நின்ற பல திரைப்படங்களைப் பார்த்துப் பழகியிருக்கிற நமக்கு, ஒரு காட்டைப் பின்புலமாகக் கொண்டு, அதன் மலைகளும், மரங்களும், நதியும், ஓடையும், சேறும், சகதியும் படம் நெடுக விரிந்து கிடப்பது புத்துணர்ச்சியூட்டும் காண்பனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் காட்டின் மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வுச் சிக்கல்களும், போராட்டங்களும் பதிவு

கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்

Image
   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதல் கவியரங்கத்தைப் பார்த்தேன். தலைமை கவிஞர் வைரமுத்து ; துவக்கி வைத்தவர் ஈரோடு தமிழன்பன். எல்லாரும் கொடுக்கப்பட்ட நேரத்தில் முதல் பத்துநிமிடங்களுக்கு கலைஞர் மேல் வாழ்த்து மழையாகப் பொழிந்து கொண்டிருக்க, அவர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் விட்டேத்தியாக அமர்ந்திருந்தார். கூட்டம் மட்டும் அவ்வப்போது பலவீனமாகக் கைதட்டியது. தமிழன்பன் படிமங்களில் விளையாடி ரத்தம், சதை, சிங்கங்கள் என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தபோது பலத்த அமைதி நிலவியது. தான் சரியாகத்தான் சொல்கிறோமா என்று வாசித்த வரிகளையே திரும்ப வாசித்துக் காட்டினார். வைரமுத்து தமிழ்த்தாய் கலைஞர் பேனாவில் மைதொட்டு கண்களுக்கு எழுதிக் கொள்ளப் பிரியப்படுவதாய்ச் சொன்னார்.         கவிஞர்கள் விவேகாவும், நா. முத்துக் குமாரும் கவிதை வாசித்தபோது, திரைப்படப் பாடலாசிரியர் என்ற ஒரு தகுதி மட்டும் கவியரங்கத்தில் கவிதை படிக்கப் போதாது என்று தோன்றியது. விவேகா கலைஞரை சாஸ்திரி, மேஸ்திரி என்றெல்லாம் புகழ்ந்து கொண்டிருந்தார். மாத்திரைகள் கொண்டிருப்பதால் தமிழ் ஒரு மருத்துவம் என்ற சகிக்க முடியாத உவமையை இருவருமே சொன்னார்கள். கி

குள்ளச்சித்தன் சரித்திரம் வாசிப்பனுபவம்

Image
ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம், ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான். ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால் நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள் அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும் சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான். (பிற்பாடு வீட்டில் உள்ள தீட்டு நீங்குவதெற்கென்று தாமிர யந்திரத்தகடு ஒன்று செய்து கொடுத்து முன்னூறு ரூபாய் தீட்டிவிட்டான்). தன் சொல் பலித்து விட்ட

வாசிப்பிற்கென்று சில நாவல்கள்

சமீபத்தில் திடீரென்று இந்தியா சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வரும்போது சில தமிழ் நாவல்களை வாங்கி வந்துள்ளேன். அவையாவன. 1. கடல்புரத்தில் – வண்ணநிலவன் 2. சாயாவனம் – சா. கந்தசாமி 3. மானசரோவர் – அசோகமித்திரன் 4. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன் 5. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன் 6. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர். 7. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி. 8. ரெயினீஸ் அய்யர் தெரு – வண்ணநிலவன் 9. ஏழாம் உலகம் – ஜெயமோகன். 10. யாசகம் - இலக்கியச் சிந்தனை 2008ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகள். குள்ளச் சித்தன் சரித்திரம் படித்து முடித்துவிட்டேன். யுவனின் மொழிநடை வீர்யத்தோடு இருக்கிறது. விறுவிறுப்பாகச் செல்லும் கதை. அளவில் சற்று குறைவாக எழுதி விட்டாரோ என்று தோன்றுகிறது. மீள்வாசிப்பிற்குப் பிறகு இது பற்றி விரிவான பதிவை எழுதலாமென்றிருக்கிறேன். சென்ற காலச்சுவடு இதழில் திரும்பிச் செல்லும் வழி என்ற ஒரு நல்ல கதையும் (குலசேகரன் என்று நினைக்கிறேன்) தீராநதியில் மா.அரங்கநாதனின் மனோரதம் என்ற சுமாரான கதையும் படித்தேன். அதிலேயே அ.முத்துலிங்கம் எழுதியுள்ள குற்றம், ஆனால் குற்றமில்லை வாசிக்கப்