Posts

Showing posts from September, 2011

முள்

பத்து வயதில் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பள்ளிப்பருவத்தில் கோடை விடுமுறைக்கு எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வது வழக்கம். எங்கள் தாத்தா திரையரங்கு ஒன்றின் மேலாளராக இருந்தார். திரையரங்கை ஒட்டி ஒரு பெரிய கோடவுன் இருந்தது. வெள்ளாவி வைத்து வேக வைத்த நெல்லை கோடவுனில் பரப்பிக் காயப் போடுவார்கள். கோடவுனிலேயே தங்கி நெல் காய வைத்தது ஒரு குடும்பம்.நெல் காயப் போடாத சமயங்களில் காலியாகக் கிடக்கும் கோடவுன் எங்களது விளையாட்டு மைதானமாக மாறிவிடும். கிரிக்கெட் , ஹாக்கி , கிட்டிப்புள் என்று மனதுக்குத் தோதான விளையாட்டுகளை ஆடுவோம்.என் வாழ்க்கையில் நான் ஹாக்கி மட்டையைத் தொட்டிருக்கிறேன் என்பதை நினைத்து எனக்கு இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முதல் முறை ஹாக்கி விளையாடியபோது பந்தை அடிப்பதற்கு பதிலாக பக்கத்து வீட்டு நந்தகோபாலின் பல்லை உடைத்து விட்டேன். அவன் வாயெல்லாம் ரத்தம். நல்லவேளை. பல் மீண்டும் வளர்ந்து விட்டது. ஒருமுறை நானும் என் தம்பியும் காலியாக இருந்த கோடவுனில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அடித்த பந்து

ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்தான்?

Image
தோஸ்தோயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலான குற்றமும் தண்டனையும், குற்றம் செய்தவன் தான் புரிந்த குற்றச்செயலுக்குப் பின்பாக மனத்தில் எதிர்கொள்ளும் போராடங்களையே குற்றத்துக்குரிய தண்டனையாகக் கொள்வதை விவரிக்கிறது. கதையின் நாயகன் ரஸ்கோல்நிகாஃப் ஒரு சட்டமாணவன். வறுமையின் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறான். சிறு சிறு பொருட்களை அடகுக்கு வாங்கிப் பணம் கடன் கொடுக்கும் வயதான பெண்மணி ஒருத்தியை அவள் தனியாக இருக்கும்போது கொல்கிறான். அந்தச் சமயம் அங்கு வரும் அவளது சகோதரியையும் கொல்கிறான். அவளிடமிருந்து பணப்பையையும், கடிகாரம், செயின் முதலிய அடகு வைக்கப்பட்ட பொருட்களையும் எடுத்துச் சென்று ரகசிய இடம் ஒன்றில் மறைத்து வைக்கிறான் யாரும் அவன் செய்த கொலைகளைப் பார்க்கவில்லை. யாரும் அவனைச் சந்தேகிப்பதும் இல்லை. சில நாட்களிலேயே கொலையுண்ட பெண்மணி தங்கியிருந்த கட்டிடத்திலிருந்து ஒரு மனிதனைக் கொலைகுற்றத்துக்காகக் கைது செய்கிறது காவல்துறை. ஆனாலும் காவல்துறைக்குத் தன் மீது சந்தேகம் இருக்கிறதா என்ற எண்ணம் அவனை அலைக்கழிக்கிறது. பதட்டம் மிகுந்தவனாகவே அலைந்து திரிகிறான். அவனது உடல்நலம் சீர்கெட்டுப் போகிறது. க