Posts

Showing posts from April, 2013

வீடு மல்லிகைப்பூ

 என் நாணயத்தின் மூன்றாம் பக்கம் என்ற சிறுகதையை ( மைக்ரோ நாவல் என்று நான் அதை அழைக்க விரும்பினேன். நானும் நாவல் எழுதினேன் என்றாகி விடுமல்லவா?) இப்படித்தான் ஆரம்பித்தேன். பிறகு ரொம்ப நாட்கள் அப்படியே கிடப்பில் போட்ட பிறகு, இக்கதையை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன என்று யோசித்து எழுதி முடித்தேன். (the coin) . பிறகு அதைத் தமிழிலும் மொழிபெயர்த்தேன். ஆனால் அதன் முதல் வடிவமான இதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வீடு மல்லிகைப்பூ மணமும் , பட்டுப்புடவை சரசரப்புமாக இருந்தது. ரகு ஒரு மூலையில் அமர்ந்து நான்கு மணி தேநீரை அருந்திக் கொண்டிருந்தான். ஓமத்ரா குடிப்பவன் போல மாறியிருந்த முகத்தை மறைக்கச் சிரமப்பட்டான். முழுசாய்க் குடிக்காமல் கீழே வைக்கக்கூடாது என்று மைதிலி சொல்லியிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டு உபசரிப்பு பிடிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வார்களாம். மைதிலியின் அக்கா பெண் தன் பட்டுப் பாவாடையைக் கையில் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. முன்னரே அது ஓடுகிற பாதையில் டம்ளரை வைத்திருந்தால் குடிக்கிற சிரமம் இருந்திருக்காது.

நாணயத்தின் மூன்றாம் பக்கம் - மைக்ரோ நாவல் (3)

கூடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, நாங்கள் சந்தித்துக் கொள்வதாக முடிவு செய்திருந்த தேநீர் கடையில் ராமகிருஷ்ணனைக் காணவில்லை. கடையின் உள்ளேயும் அவர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. கடைக்கு வெளியே நின்றபடி அலைபேசியில் அவரை அழைத்தேன்.         போக்குவரத்து ஏற்படுத்திய இரைச்சல் காரணமாக அவரது குரலைப் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. ஒரு சாயப் பட்டறையில் மாட்டிக் கொண்டதாகவும், இன்னும் இருபது நிமிடங்களில் என்னைச் சந்திப்பதாகவும், அதுவரை தேநீர் கடையிலேயே காத்திருக்கும்படியும் சொன்னார். சொன்னார். கிளம்புவதற்கு முன்னமே அவரைத் தொடர்பு கொள்ளாததற்கு என்னயே சபித்துக் கொண்டேன்.         என் அதிர்ஷ்டத்தை நொந்தபடி கடையின் வெளியில் காத்துக் கொண்டிருக்கையில் (கடையின் உள்ளே ஓர் இருக்கை கூடக் காலியாக இல்லை.) என்னிடத்தில் ஒரு விருந்தினர் வந்தார். அந்த மனிதன் முதலில் தேநீர் கடையின் முதலாளியிடமும், உள்ளே இருந்தவர்களிடமும் தன் அதிர்ஷ்ட்த்தைப் பரிசோதித்திருக்க வேண்டும்; அவன் நின்ற கோலமே, நான் அவனுக்கு என் பாக்கெட்டிலிருந்து ஏதேனும் எடுத்துத் தரவேண்டும் என்று சொல்வதைப் போலிருந்தது. சில நிமிட

நாணயத்தின் மூன்றாம் பக்கம் - மைக்ரோ நாவல் (2)

பேருந்து பிடித்துச் செல்லலாமா என்று தோன்றிய யோசனையை உடனே கைவிட்டேன். பேருந்து நிறுத்தத்தை அடைய பத்து நிமிடங்களாக நடக்க வேண்டும்; பேருந்துக்காகக் காத்திருப்பது வேறு கணிசமான நேரத்தை எடுத்துக் கொள்ளும்; பவானி பேருந்து நிலையத்திலிருந்து ராமகிருஷ்ணன் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லுதலும் அவ்வளவு எளிய விஷயம் அல்ல. வேகமாக நடந்தால் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்களுக்குள் அவரை அடைந்து விட முடியும் என்று தீர்மானித்தேன்.         பவானிக்கும், கொமாரபாளையத்துக்கும் இடையில் காவேரி ஆறு ஓடியது. இந்த இடத்தில் அதற்குக் குறிப்பாக பவானி ஆறு என்றே பெயர். மூன்று பெரிய பாலங்கள் வெவ்வேறு இடங்களில் இரண்டு குறு நகரங்களையும் இணைத்தன. பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த மூன்றாவது பாலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இன்னுந்ன்ந்ம் முறைப்படி திறப்பு விழா நடைபெறாததால், நான்கு சக்கர கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இரு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. கொமாரபாளையத்தின் ஜவுளி நெசவாலை மற்றும் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பவானிக்காரர்கள் இந்தப் பாலத்தைப் போக வர உ

நாணயத்தின் மூன்றாம் பக்கம் - மைக்ரோ நாவல் (1)

காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும். விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது; குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை. விருந்தினர் தரும் எதையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவே மரபு வலியுறுத்துகிறது. குப்பைத் தொட்டிக்குள் குப்பையை வீசுகிற மாதிரி உங்கள் திசையில் வருகிற எல்லாவற்றையும் தொண்டைக்குள் வீசி விட வேண்டியதுதான்.         இந்த ஒரு மணி நேரத்தில் நான்காவது முறையாக பாண்ட் பாக்கெட்டில் என் அலைபேசி அதிர்ந்தது. ஒரே விழுங்கில் காஃபி குடிப்பதற்குண்டான சூடு உள்ளதென்பதை உறுதி செய்துகொண்டு தொண்டையில் சரித்துக் கொண்டு அவசரமாக அலைபேசியை எடுத்தேன். என் முன்னாள் மேலாளர் ராமகிருஷ்ணன் அழைத்துக் கொண்டிருந்தார்.