Posts

Showing posts from April, 2011

தர்மத்தின் மதிப்பு

Image
ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களது தர்மத்தின் மதிப்புதான் என்ன? என்ற சிறிய நூல் தர்மம் என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடய மதிப்பையும் பூரணமாக அறிந்து கொள்ள உதவுகிறது. தர்மம் என்ற சொல்லுக்குப் பெரும்பாலோர் தானம் செய்வது என்ற பொருளையே மனதில் கொள்கின்றனர். ஆனால் தர்மம் என்ற சொல்லுக்கு வாழ்க்கை நெறி என்பதே பொருளாகும். நமது வேதங்கள் சமுதாயத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று பல்வேறு நெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. அவ்வாறு தர்மத்தைப் பின்பற்றி வாழும் மனிதனின் மனம் சரியான திசையில் வளர்ச்சி அடைகின்றது. இதன் மூலம் வாழ்வின் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்கான பாதையில் பயணிப்பதற்கான முழு தகுதியை அவன் அடைகிறான். எனவே இந்த உலக வாழ்க்கையில் நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழ விரும்புபவர்களும், வாழ்வு கொடுக்கும் இன்பம், துன்பம் என்ற இரட்டைகளிலிருந்து விடுபட் விரும்புபவர்களும் தர்மம் என்றால் என்ன, அதை எவ்வாறு பின்பற்றுவது என்று தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும். இதை தெளிவாகச் சொல்வது மட்டுமல்ல, தர்மத்தைப் பின்பற்றுவதற்குத் தேவையான பண்புகளை விளக்கி, அப்பண்புகளை நம் மயமாகவே ஆக்கிக் கொள்

கைவல்ய நவநீதம் 2

நூன்முகம் இங்கு நூலாசிரியர் இஷ்டதெய்வநமஸ்காரரூபமங்கலத்தைஅங்கீகரிக்கிறார் . பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம் தன்னிலம் தரத்தில்   ஜீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும் எந்நிலங்களினும் மிக்க எழுநிலம் அவற்றின் மேலாம் நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி மண்குடம் , பொற்குடம்ஆகிய   குடங்களில்விழும்பொருட்களுக்குவேறுபாடின்றி இடம் அளிக்கும் ஆகாசத்தைப் போல , பொன்னாசை , பெண்ணாசை , மண்ணாசை உடைய அஞ்ஞானிகள் , இவை அற்ற ஞானிகள் இருவரது உள்ளங்களிலும் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் ஏக நாயகனுடைய பதங்களை வணங்குகிறேன் . மனித மனதில் எத்தனைக் குறைகள் இருப்பினும் அவை அனைத்தும் இம்மூன்றுக்குள்அடங்கிவிடும்என்பதலாயேஇம்மூன்று   ஆசைகளைக்   குறிப்பிட்டார் . ஆன்றோர்களால் கூறப்படுகின்ற ஞான பூமிகளில் சிறந்ததவை ஏழு நிலங்கள் . அவை சுபேச்சை , விசாரணை , தநுமானசி , சத்துவாபத்தி , அசம்சத்தி ,  பதார்த்தா பாவனை , துரியம் ஆகியன . துரியத்துக்கு மேல் வேறு ஒரு நிலை கிடையாது . விதேக முக்தி ஒன்றுதான் உண்டு . எனவேதான் எழுநிலத்திலும் மேலான நன்னி

கைவல்ய நவநீதம் 1

கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை என் கையில் கிடைத்தது . தொள்ளாயிரத்து இருபதுகளில் எழுதப்பட்ட மணிப்பிரவாள நடையிலான தமிழ் . குரு ஒருவர் விளக்க நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடியும் . கோவிலூர் மரபைப் பின்பற்றும் மடங்களில் கைவல்ய நவநீதம் மிகப் பிரசித்தம் . ஸ்வாமி ஓம்காரானந்தாவின் கைவல்ய நவநீத வகுப்பு கொஞ்சம் கேட்டிருக்கிறேன் . இது பொன்னம்பல ஸ்வாமிகள் உரையைப் படித்து எனக்குப் புரிந்ததைக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன் . இவ்வுலகில்   எல்லா    மனிதர்களும்    தங்கள் துக்கத்தை   நீக்கிக்    கொள்ள   வேண்டுமென்றும்  ,  ஆனந்தத்தை   அடைய   வேண்டுமென்றே   விரும்புகிறார்கள் .  இவையிரண்டும் முழுமையாக அடையப்பட்ட நிலை முக்தி , மோக்ஷம் அல்லது   ஆன்ம   விடுதலை    என்றழைக்கப்படுகிறது . இந்த   நிலையை   அடைய   வேண்டுமென்றால்   அதற்கு   ஒரே   வழி   பிரம்ம   ஞானத்தை    அடைவதே . இதன்   பொருட்டே   பரம   கருணாநிதியாகிய   பரமேஸ்வரன்   நான்கு   வேதங்களின்   வாயிலாகவும்   அந்த