நூன்முகம்
இங்கு நூலாசிரியர் இஷ்டதெய்வநமஸ்காரரூபமங்கலத்தைஅங்கீகரிக்கிறார்.
பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்
தன்னிலம் தரத்தில் ஜீவ சாட்சி மாத்திரமாய் நிற்கும்
எந்நிலங்களினும் மிக்க எழுநிலம் அவற்றின் மேலாம்
நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி
மண்குடம்,பொற்குடம்ஆகிய குடங்களில்விழும்பொருட்களுக்குவேறுபாடின்றி இடம் அளிக்கும் ஆகாசத்தைப் போல,பொன்னாசை, பெண்ணாசை,மண்ணாசை உடைய அஞ்ஞானிகள், இவை அற்ற ஞானிகள் இருவரது உள்ளங்களிலும் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் ஏக நாயகனுடைய பதங்களை வணங்குகிறேன்.
மனித மனதில் எத்தனைக் குறைகள் இருப்பினும் அவை அனைத்தும் இம்மூன்றுக்குள்அடங்கிவிடும்என்பதலாயேஇம்மூன்று ஆசைகளைக் குறிப்பிட்டார்.
ஆன்றோர்களால் கூறப்படுகின்ற ஞான பூமிகளில் சிறந்ததவை ஏழு நிலங்கள். அவை சுபேச்சை, விசாரணை, தநுமானசி, சத்துவாபத்தி, அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் ஆகியன. துரியத்துக்கு மேல் வேறு ஒரு நிலை கிடையாது. விதேக முக்தி ஒன்றுதான் உண்டு. எனவேதான் எழுநிலத்திலும் மேலான நன்னிலம் என்று கூறப்பட்டது.
விழிப்பு நிலை(ஜாக்ரத்), கனவு நிலை(ஸ்வப்னம்) , உறக்க நிலை(சுஷுப்தி) ஆகிய மூன்று நிலைகளிலும் கொள்ளும் அபிமானமே பந்தம் எனப்படுகிறது.
இம்மூன்று அவஸ்தைகளும் கோரம், சாந்தம், மூடம் என்ற மனோ விருத்திகளாதலால்
விசாரத்தால் அல்லது தியான ரூபமாகிய பிரம்மா அனுசந்தானத்தின் வலிமையால் அவைகள் நாசமடையும். பிரம்மம் மட்டும் தன மயமாகவே விளங்கி நிற்கும்.அஞ்ஞானமும், அதன் காரியங்களான அனர்த்தங்களும் நீங்கி பிரம்மம் மட்டுமே விளங்கும் இந்நிலை துரியம் எனப்படுகிறது.