வானப்ரஸ்தம்
வானப்ரஸ்தம் குறித்து
மிக அருமையான வாசிப்பு அனுபவம் தந்த கதை வான பிரஸ்தம்
சென்ற பூன் முகாமில் காலை காபியின் போது ஜெ., கேரளாவிற்கு வலசை வரும் பறவைகளை பார்க்க தொலைதூர நிலங்களில் இருந்து எல்லாம் வெளிநாட்டினரை பற்றி சொன்னார்.. நான் அவ்வாறு அவ்வளவு தொலைவு வந்து பார்த்த பின் அவர்கள் அடையும் மாற்றம் என்பது என்னவாக இருக்கும் .. அந்த சுவிட்ச் என்ன செய்யும் என்று கேட்டேன்.. அவர் அது தெரியாது.. அவர்கள் மீண்டு வந்து சொன்னால் உண்டு, ஆனால் எவரும் வர மாட்டார்கள் அடைந்ததில் இருந்து மேலே சென்று விடுவார்கள். புனைவாக வேண்டுமானால் எழுதி பார்க்கலாம் அல்லது நாம் அவ்வாறு ஒன்றை செய்து பார்த்து முயலலாம் என்றார்.. வெகுகாலம் என்னை தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஒரு பதிலாக இருந்தது.
இந்த கதையில் , அவர் மற்ற வாழ்வின் பருவங்களை " முழுமையாக" செய்யவில்லை என்றே எடுத்துக்கொண்டேன் . ஆனால் அவருக்கு வான பிரஸ்தம் அமைகிறது. அந்த "சுவிட்ச்" நிகழ்கிறது. எப்படி? ஏன்? ஆனால் கதையில் மகளின் கிரகஸ்த்த பருவம் பற்றி பேச்சில், அம்மா இதற்கு முன் மகளின் திருமணத்தை வலியுறுத்தி வந்தவர் உன்னுடைய அதை பற்றி எனக்கு என்ன ? என்கிறார்.
அவரின் younger self ஆன அவர் மகள், பிறரை பார்த்து பயப்படுகிறார்.. ஆனால், அம்மாவோ நடுக்காட்டில் தன்தனியாகக இருக்கும் ஆணை அணுகவோ , அவருக்கு அறிவுரை அளிக்கவோ எந்த தயக்கமும் இல்லை. இது பின்னர் மகளிடம் transformation யை ஏற்படுத்துகிறது. ஒருவேளை அவர் வாழ்வின் இரண்டாவது பருவத்தை ( கிரகஸ்த்த) முழுமையாக செய்ய முடியலாம்.
இன்னும் ஒரு நுணுக்கமான குறிப்பு கதையில் அந்த அம்மா மாற்றம் அடைந்து இருந்தாலும் அவரின் வயது மற்றும் உடலின் எல்லைகள் அப்படியே தான் இருக்கின்றன. மூச்சு வாங்குகிறது.. சர்க்கரை அளவு குறைகிறது..இது அந்த மாற்றத்தை புனிதமான ஒன்றாக பார்ப்பதில் இருந்து விடுவிக்கிறது . இறைச்சியை ஒதுக்கி வைத்து விட்டு அவர் சாப்பிடும் படிமம் அருமையாக இருக்கிறது.
மிகவும் சுவாரசியமான ஒன்று அந்த ஆணின் கதாபாத்திரம். அந்த மலைகளைப் போல அவன அங்கு ஸ்திதப்பிரக்ஞன் ஆக இருக்கிறான்.. அவனால் அந்த அம்மாவை ஒரு செயின்ட் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கடந்தகால வாழ்க்கை உடையவர்கள் எனும்போது , எது மேலதிகமாக அந்த அம்மாவை விடுதலை செய்தது என்பது கேள்விகளை எழுப்புகிறது. அல்லது அவன் நேரடியாக உலகியலை தேர்ந்து சன்னியாச பருவம் அடைந்தவனாக கொள்ள முடியுமா?
உங்களின் ஆக சிறந்த கதைகளில் ஒன்றாக இதை தயக்கமில்லாமல் சொல்வேன்.
வாழ்த்துக்கள் ஜெகதீஷ்.