வாசிப்பிற்கான புத்தகங்கள்


இந்த ஆண்டு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது நிறைய நாவல்கள் வாங்க வேண்டுமென்ற முடிவோடு சென்றிருந்தேன். போனபிறகு புத்தி மாறிவிட்டது. தத்துவம் பக்கம் மனம் சாய்ந்து விட்டது. இருப்பினும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டுதான் வந்தேன். சில புத்தகங்களை வாங்குவதற்கு நண்பன் ஜெயச்சந்திரன் உதவினான். வேதாந்தம் மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை வாங்குவதற்கு அவன்தான் எனக்கு வழிகாட்டி.
நான் வாங்கிய புத்தகங்கள்
1. பகவத் கீதா – சாதக சஞ்சீவினி இரு பாகங்கள் – ஸ்வாமி ராம்சுகதாஸ் அவர்களின் விளக்கவுரை.
2. உத்தவ கீதா – பொழிப்புரை
3. ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம்
( மேற்கண்ட மூன்றும் கீதா பிரஸ் வெளியீடு. இதோடு சுசீலா ஓர் இலட்சியப் பெண்மணி போன்ற நல்லறிவு கொடுக்கும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கினேன்).
4. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா பதிப்பகம்.
5. யயாதி இரு பாகங்கள் – வி. எஸ். காண்டேகர் – அல்லயன்ஸ் பதிப்பகம்.
6. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து.
7. இராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்)– இராஜாஜி – வானதி பதிப்பகம்
8. மஹாபாரதம் (வியாசர் விருந்து) – இராஜாஜி – வானதி பதிப்பகம்
9. தர்மத்தின் மதிப்புதான் என்ன? – ஸ்வாமி தயானந்த சரஸ்வதி – வானதி பதிப்பகம். ( இந்த நூலோடு சேர்த்து, சாதனமும், சாத்யமும் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரம் என்ற ஸ்வாமிஜியின் இரு நூல்களையும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன்மிகத்திற்கு நுழைவாயிலாக இம்மூன்று நூல்களும் அமைகின்றன)
10. அர்த்தமுள்ள இந்துமதம் பன்னிரு பாகங்கள் – கண்ணதாசன் – கண்ணதாசன் பதிப்பகம்.
இது மட்டுமன்று ஜெயச்சந்திரன் புண்ணியத்தில் ஸ்வாமி ஓம்காரானந்தாவின் வேதாந்த பாட உரைகள் தொகுப்பும் ஒலி வடிவில் கிடைத்தது. இந்த ஆண்டுக்கு இது போது என்று நினைக்கிறேன்.

Comments

  1. அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து அம்ருதத்துவத்துக்கும் எங்களை வழி நடத்துவாயாக!


    எங்களை endru yaaraiyellam kuripidugirai jega?

    வழி நடத்துவாயாக endru yaarai yasikirai jega?

    அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு sella venduma jega? Unnal poi pesamal irukka mudiyuma jega? Poi pesamal Harichandiranai pola ne vazha virumbugiraiya jega? Unmaikaga etthagaiya thyagathaiyum seiya ne tayara jega?

    இருளிலிருந்து ஒளிக்கும்...Ariyamai ennum irulil irundhu Jnanam endra oliku ne sella virumbugiraya jega? Illarathil irundhu thuravaram yerka summadhama jega?

    மரணத்திலிருந்து அம்ருதத்துவத்துக்கும்... Pirapil irundhu maranathirkum... maranathil irundhu pirapirkum sellvadhu thanne iyarkai...

    Sari மரணத்திலிருந்து அம்ருதத்துவத்துக்கும் vazhi nadatha yasikirai... Maranam adaiya ne thayara jega? ennendral மரணத்திலிருந்து thaane அம்ருதத்துவத்துக்கு alaithu sella vendi yullathu?

    Kiliyai pola sonnathai sollvathil payan yillai? Poonai(cat) varum pozhudhu kiliyin suya rupam therindhu vidum...

    jega ne kiliyum illai... jega naan poonaiyum alla... naam iruvarume yaar endru namakku theriyum! Unakum enakum adhu therindhal podhum!

    ReplyDelete
  2. thanks.
    whatever you say, i hope will help me grow.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை