Monday, November 8, 2010

அன்பு நண்பர்களுக்கு

அன்பு நண்பர்களுக்கு,
வரும் நவம்பர் பத்தாம் தேதி இந்தியா வருகிறேன். இலக்கிய நண்பர்கள் யாரையும் சந்திப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஊரில் எனக்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவன் யுவராஜ் எனக்கு சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து உதவியவன். இன்னொருவர் கே.சி. முருகன். தனிப்பயிற்சிக் கல்லூரி வைத்திருக்கிறார். அப்துல் கலாம், கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, இந்த மாதிரிதான் அவரது வாசிப்புப் பழக்கம். ஊருக்குப் போனால் இருவரும் தத்துவம், இலக்கியம், கல்வி என்று மணிக்கணக்கில் பேசுவோம். என் திறமை  மீது அபார நம்பிக்கை அவருக்கு. நான் அங்கு சென்றால் என்னை வைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு ஒன்று எடுத்து விடுவார். நானும் நிறைய புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு போய் வகுப்பெடுப்பேன் . இடையிடையே எனக்குத் தெரிந்த, நான் அரைகுறையாகப் பயிற்சி செய்கிற எளிய யோகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சத்தைப் பார்க்க பரவசமாக இருக்கும்.

இந்த ஆண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லலாமா என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் சென்னையின் மக்கள் நெருக்கத்தை நினைத்தாலே மூச்சுத் திணறுகிறது. நானெல்லாம் சுற்றிலும் கடல் சூழ்ந்த கோமணத் துண்டு அளவு நிலத்தில் ஹைடெக் ஆதிவாசி போல வாழ்ந்து வருபவன். ஊருக்கு வந்து சாலையைக் கடக்கக் கூட நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஈரோட்டில் ஏதாவது புத்தகச் சந்தை இருந்தால் போகலாம். மற்றபடி ஊர் சுற்றும் பழக்கமெல்லாம் என் ரத்தத்தில் இல்லை. வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளூரிலேயே சுற்றிச் சுற்றி வந்து கடைகளில் எதையாவது வாங்கிக் கொண்டு, ஓட்டல்களில் வித விதமான உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே கழிந்து விடும் என் விடுமுறை.

     சில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்குக் கோவை விஜயா  பதிப்பகம் போதும். மனைவியை மகிழ்வூட்ட மைசூர் சென்றாலும் செல்வேன். சிதம்பரம் செல்லலாமா என்று ஒரு ஆசை இருக்கிறது. ஈரோட்டுப் பக்கமாய் ஏதாவது இலக்கியச் சந்திப்புகள் இருந்தால் வருவேன். முடிந்தால் தெரிவியுங்களேன்.

2 comments:

 1. அன்பின் ஜகதீஷ்,
  இந்திய வருகை பற்றி மகிழ்ச்சி.புது தில்லி வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
  முன்பொருமுறை நான் மொழிபெயர்த்தகுற்றமும்தண்டனையும் பற்றி எழுதியிருந்தீர்கள்.இப்போது இடியட் மொழியாக்கத்தையும் முடித்து விட்டேன்.அச்சிலுள்ளது..
  என் வலையைக் காண்க.
  உங்கள் தொடர்புமின் அஞ்சல் இருந்தால் நலம்.
  http://www.masusila.com/2010/11/blog-post_14.html

  ReplyDelete
 2. thank you madam,
  i am very much delighted to see your mail. its a great honour for me.
  put up with me i am typing in english(from a browsing centre).
  this is my id. i have recently got my own copy of crime and punishment in english.
  i would like to read it in tamil though.
  i am a regular visitor to your blog.
  i have the greatest regard and gratitude for your service in the field of translation.
  i will surely contact you regularly with my feed back.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.