Saturday, October 30, 2010

கல்வி கடிதங்கள்

Hi Jagadeesh
எனது இரண்டாவது மகனை பள்ளியில் சேர்த்து விட்டு அங்குள்ள அடிப்படை வசதி இன்மை மற்றும் கல்வி கற்பிக்கும் முறையில் எனக்கு உடன்பாடிலாததால் பள்ளியோடு ஒரு பெரும் போராட்டத்தை தனியாக அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது குறித்து ஏற்கனவே சில பதிவுகளும் போட்டிருக்கிறேன். 

பதிவுகளை படித்து எனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் தளத்தில் கொஞ்சம் இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது விருட்சத்தில் பின்னூட்டம் இடுமாறு  கேட்டுக் கொள்கிறேன.் நியாயம் இல்லை என்று நினைத்தால் விருட்சத்தில்  அதன்  காரணங்களை பின்னூட்டம் இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உங்கள் கருத்துக்கள் பெரிய உதவியாக இருக்கும். 

இது ஒரு தாயின் போராட்டம். பள்ளியில் வேறு எந்த பெற்றோரும் இது வரை பெரிதாக இதில் இறங்காத நிலையில் 
இது ஒரு தனி மனித போராட்டம். 
Dept of Edu அதிகாரிகளிடம் புகார் அளிககு முன் பலரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். 


நன்றி.

விருட்சம்

Hi Jagadeesh

Happy Diwali.

Its long time since I communicated to you. 

My younger son is attending LKG and he is 3+. The school forces him and other kids to write in notbooks using pencil. It gives strokes, cursive writings, numbers, alphabets in English and Tamil etc. The kid is expected to write two 2 to 3 pages sometime. Kid is totally not interested and refuses to hold hand to do it. He also complaints at school when the teacher holds hand to make him write it pains. School never understands.

You are a teacher . So I thought it would be appropriate to discuss with you on this specific issue. Is it correct to expect kids of age 3+ to write using pencil that too numbers 1 - 8, cursive writing joining 3 letters, ப, ம, ய etc for 1 or more pages?

Kindly get back to me on this. 

Thanks in advancearticle in my website

Virutcham

அன்புள்ள விருட்சம்

தாமதத்திற்கும், நீண்ட நாள் தொடர்பின்மைக்கும் மன்னிக்கவும்.  ஆண்டு இறுதியாதலால் தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் என்று பரபரப்பாக இருக்கிறேன்.

உங்கள் கடிதம் கண்டவுடன் நான் காணாத உங்கள் மகன் மீது மிகுந்த பரிவேற்ப்பட்டது. இந்த நாட்களில் நம் நாட்டிலும் PLAY WAY SCHOOLS அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்னமும் பழைய கல்வி முறையேதான் ஆரம்பப் பள்ளி நிலைகளிலும் தொடர்கிறது போலிருக்கிறது.
                பக்கம் பக்கமாக எழுத வைப்பதும் அதைக் குழந்தைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவர்கள் மீது புரியப்படும் வன்முறைச் செயலாகவே எனக்குப்படுகிறது. அதுவும் உங்கள் பையனுக்கு ஆசிரியர் கைபிடித்து எழுதச் சொல்லித்தரும் போது அவனுக்குக் கைவலிக்கும் என்று கூட உணர முடியாத அளவுக்கு மரத்துத்தான் போயிருக்கிறது பல ஆசிரியர்களது மனம். பெரும்பாலான ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தல் என்பது பற்றிய எந்தக் கருதுகோள்களும் இல்லாமல் பணிக்கு வருகிறார்கள். தங்களது பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தத்தில்தான் பெரும்பாலோர் பணிபுரிகிறார்கள். குழந்தைகள் சில நூறு ஆங்கில வார்த்தைகளை பேசவும், எழுதவும் பழகி விட்டால் அவர்கள் பணி வெற்றி அடைந்து விடுகிறது. ஒரு பள்ளியின் புகழ் கூட இது போன்ற காரணிகளால்தான் தீர்மானிக்கப் படுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் எல்லாருக்குமே கல்வி என்பது ஒரு குழந்தையின் மன வளம் சார்ந்தது என்பதும், அவனது படைப்புத்திறனும், கற்பனைத்திறனும் அது இருக்க வேண்டும் என்பதும், அவனை எல்லா விதங்களிலும் முழு மனிதனாக உருவமைக்க அது உதவ வேண்டும் என்பது தெரிவதில்லை. இல்லை தெரிந்தும் அதைப் புறக்கணிக்கிறார்களா என்று தெரியவில்லை.
        நாமெல்லாம் சிறு வயதில் எப்படிப் படித்தோமோ, அதே முறையில்தான் இன்றைய குழந்தைகளும் படிக்கிறார்கள். உலகம் பலவிதங்களில் மாறிவிட்டது. அதிக மதிப்பெண் எடுக்க வைப்பது என்ற ஒரு குறிக்கோள் தவிர வேறெதுவும் பள்ளிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பல பெற்றோர்களுக்குத் தன் பிள்ளை ஒரு பதினைந்து வருடம் கழித்து பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிவிட வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனாலேயே அவர்களும் இந்த மாதிரிப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.
ஆனால் இப்போது உலகம் முழுவதும் இந்தியா உள்பட, CHILD CENTERED LEARNING என்ற கருத்து பிரபலமடைந்து வருகிறது. இந்தியா தவிர பிற நாடுகளில் இது போன்ற வன்முறையான கல்வித்திணிப்பு அறவே கிடையாது. குறைந்த பட்சம் குழந்தைகளை மென்மையாகக் கையாள வேண்டும் என்பதாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
உங்கள் கடிதத்தை ஒட்டி என்னுடைய கருத்துக்களை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
உங்களைப் போலவே  எனக்கும் குழந்தைகளை பக்கம் பக்கமாக எழுத வைப்பதில் சம்மதமில்லை. கையால் எழுதுதல் என்பது இந்தக் காலத்தில் அறவே ஒழிந்து விட்ட நிலையில் கையெழுத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்று தோன்றுகிறது.
ஆசிரியர்கள் குழந்தையை மென்மையாகக் கையாள வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்தைச் சந்தித்து எவ்வளவு பதமாக முடியுமோ அவ்வளவு பதமாக இந்தப் பிரச்னையைச் சொல்லி விடுவது நல்லது. ஒரு வேளை தான் ஆசிரியர் பற்றிக் குறை சொன்னால் அது பெரிய பிரச்னையாகி விடுமோ என்று அஞ்சி இனிமேல் உங்கள் குழந்தை உங்களிடம் இனிமேல் எதுவும் சொல்லாமல் விட்டு விடக்கூட வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் சில விஷயங்களில் நம்மை விட முதிர்ந்தவர்கள்.
இந்தக் கல்வி முறையே உங்களுக்குச் சம்மதமில்லை எனில் CHILD CENTERED LEARNING அடிப்படையில் கற்றுத் தரும் பள்ளிகளில் ஒன்றில் அவனைச் சேர்க்கலாம். இந்த மாதிரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வலிக்காமல் சொல்லித்தருவார்கள். அவர்களது CREATIVE THINKING ஐ வளர்ப்பதற்க்கான கல்வி முறையே அவர்களால் பின்பற்றப்படுகிறது. என்ன, மற்ற குழந்தைகளைப் போல அவனது வளர்ச்சியை மதிப்பெண்களைக் கொண்டு அளக்க முடியாது. அவனது EMOTIONAL GROWTH ஐ அவனுடன் அமர்ந்து பழகுவதன் மூலமும், அன்றாடம் அவன் புரியும் செயல்களில், எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் அவனது படைப்புத்திறன் வெளிப்படுதன் மூலமே அவன் வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் மகனுக்கு அதிக நேரம் செலவிடும் தகப்பனாகத்தான் நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. பெற்றோர் ஒரு குழந்தையுடன் ஆக்கபூர்வமாகச் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் கற்கும் நேரமே.
உங்கள் கடிதம் பார்த்ததும், நம் இருவருக்கும் பெரிய பழக்கம் இல்லையென்றாலும் கூட மிகுந்த நட்பாக உணர்ந்தேன். உங்கள் எண்ணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டது நீங்கள் எனக்குச் செய்த பெரிய மரியாதை. என் அனுபவத்தில் எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன். இந்த விஷயத்தில் நீங்களாகவே தெளிவாக முடிவெடுக்கும் அளவுக்குத் திறமை வாய்ந்தவர் தான். இருந்தாலும் நான் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு எவ்விதத்திலும் உதவினால் எனக்கு மகிழ்ச்சியே.
நன்றி.
With regards


Jegadeesh kumar 
 (ஜெகதீஷ் குமார்)
Jaegadeesh, 
உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆறுதல் அளிக்கிறது. பள்ளியிடம் திரும்பத் திரும்ப பேசி ஆயிற்று. புரிந்து கொள்வதாகத் தெரியலை.
குழந்தைகளின் கல்விக்காக மணிக் கணக்கில் மெனக்கெடும் அப்பாக்கள் யாரையாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். இது ஒரு தாயின் புலம்பல்.

1 comment:

Note: Only a member of this blog may post a comment.